LATEST NEWS
முதல்வர் விஜய் நினைத்தாலும் அது நடக்காது… ஆனா ஜெயலலிதா மட்டும் இருந்திருந்தால்…சிவி சண்முகம் ஓபன் டாக்..!!!
விழுப்புரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் C.V. சண்முகம், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் நல்லாட்சி தர நினைத்தாலும், அரசு அதிகாரிகளின் தவறான செயல்பாடுகளாலேயே அதில் பின்னடைவு ஏற்படுவதாகக் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், மாநிலத்தில் ஆட்சி மாற்றங்கள் நிகழ்ந்த போதிலும், காவல்துறை இன்னும் தங்களை மாற்றி திருத்திக் கொள்ளவில்லை என்று சாடிய அவர், காவல் துறையின் போக்கு தொடர்ந்து கவலை அளிப்பதாகத் தெரிவித்தார்.
அதிமுகவில் உள்ள பெண் நிர்வாகிகளையும் தொண்டர்களையும் இலக்கு வைத்து சமூக வலைதளங்களில் தொடர்ந்து அவதூறான கருத்துகள் பரப்பப்பட்டு வருவதாக அவர் வேதனை தெரிவித்தார். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால் இதுபோன்ற அவதூறுகளும், தற்போதைய மோசமான சூழ்நிலையும் நிச்சயமாக ஏற்பட்டிருக்காது என்றும் C.V. சண்முகம் தனது பேட்டியில் ஆணித்தரமாகக் கூறினார்.
