தினமும் 1 கைப்பிடி உலர் திராட்சை… விடியற்காலையில் சாப்பிட்டால் உடலில் நடக்கும் மேஜிக்.. நீங்களும் டிரை பண்ணி பாருங்க…!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

தினமும் 1 கைப்பிடி உலர் திராட்சை… விடியற்காலையில் சாப்பிட்டால் உடலில் நடக்கும் மேஜிக்.. நீங்களும் டிரை பண்ணி பாருங்க…!!

Published

on

தினமும் உலர் திராட்சை சாப்பிடுவது குடல் இயக்கத்தை சீராக்க பெரிதும் உதவுகிறது. இதில் நார்ச்சத்து நிறைந்துள்ளதால், இது குடலில் நீரைத் தக்கவைத்து உணவு எளிதாகச் செல்ல வழிவகை செய்கிறது. மேலும், இதில் உள்ள ‘சார்பிட்டால்’  எனும் கார்போஹைட்ரேட் வேதிப்பொருள் சர்க்கரை ஆல்கஹாலை உருவாக்கி மலச்சிக்கலை முழுமையாகப் போக்க உதவுகிறது. இதைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் பாதிப்புகள் பாதியாகக் குறையும் என மருத்துவர் விளக்குகிறார்.

உலர் திராட்சை குடலின் நீர் சமநிலையை மேம்படுத்துவதோடு, உடலுக்கு நன்மை செய்யும் ஆரோக்கியமான குடல் பாக்டீரியாக்களுக்கு நல்ல ஊட்டமளிக்கிறது. இது வயிற்றில் ஏற்படும் அமிலத்தன்மை மற்றும் வயிற்றுப் பாரத்தைக் குறைக்கப் பயன்படுகிறது. ஆரோக்கியமான குடல் செயல்பாட்டின் மூலம் ஆசனவாய்ப் பிளவு மற்றும் மூல நோய் போன்ற தீவிர நோய்கள் ஏற்படும் அபாயத்தை இது வெகுவாகக் குறைக்கிறது. இதில் உள்ள பொட்டாசியம் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் இதயத்தையும் செரிமான மண்டலத்தையும் ஆரோக்கியமாக வைத்திருக்கின்றன.

Advertisement

உடலுக்கு முழுமையான ஆரோக்கியம் கிடைக்க வேண்டுமெனில், 8 முதல் 10 உலர் திராட்சைகளை இரவு முழுவதும் தண்ணீரில் ஊறவைத்து, மறுநாள் காலையில் சாப்பிட வேண்டும். ஒருவேளை காலையில் சாப்பிட நேரம் இல்லாதவர்கள், நாள் முழுவதும் எந்த நேரத்திலாவது 5 முதல் 6 உலர் திராட்சைகளை அப்படியே சாப்பிட்டாலும் உடலுக்குப் போதுமான நன்மைகள் கிடைக்கும்

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in