LATEST NEWS
இப்படியொரு புத்திசாலித்தனமா..?! மனுஷன விட இந்த மாட்டுக்கு அறிவு ஜாஸ்தியா இருக்குப்பா… வீட்டின் தாழ்ப்பாளைத் தட்டி ஆர்டர் போடும் காளை மாடு..! வைரல் வீடியோ..!!
பொதுவாகக் காலை வேளையில் வீடுகளில் பரபரப்பான சூழ்நிலை நிலவும். டீ குடிப்பது, குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்புவது எனச் சமையலறையிலும் வீட்டிலும் அனைவரும் பிஸியாக இருக்கும் நேரத்தில், கதவின் தாழ்ப்பாள் அல்லது மணி சத்தம் கேட்டால் பால் காரர், காய்கறிக்ககாரர் அல்லது நாளிதழ் தருபவர் வந்திருப்பார் என்றே நினைப்பார்கள். ஆனால், தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், கதவைத் தட்டி வீட்டுக்காரர்களை அதிர்ச்சியிலும் சிரிப்பிலும் ஆழ்த்தியுள்ளார் ஒரு விசித்திரமான விருந்தினர்.
சமூக வலைத்தளங்களில் பரவி வரும் அந்த வீடியோவில், ஒரு பெரிய காளை மாடு காலையிலேயே தெருவில் உள்ள வீடுகளின் முன் உலா வருகிறது. அது சும்மா நின்று கொண்டு இருக்காமல், தன் தலை மற்றும் நாவைப் பயன்படுத்தி கதவின் தாழ்ப்பாளை ஆட்டிச் சத்தம் எழுப்புகிறது. சத்தம் கேட்டதும், கதவு திறக்கும் வரை அமைதியாகச் சற்று பின்வாங்கிப் பொறுமையுடன் காத்திருக்கிறது. கதவு திறந்தவுடன் மக்கள் மனிதருக்குப் பதிலாகக் காளை மாடு நிற்பதைக் கண்டு வியப்படைகிறார்கள். அப்பகுதி மக்களுக்கு இந்தக் காளையின் பழக்கம் முன்பே அறிமுகமாகியிருந்ததால், பல வீடுகளில் அதற்கு ரொட்டி அல்லது உணவுகளை வழங்குகிறார்கள்.
https://www.instagram.com/reel/DcAb0qtyvkL/?utm_source=ig_web_button_share_sheet
ரொட்டி வாங்குவதற்காகவே இந்தச் சமயோசிதமான வழியைக் காளை மாடு கண்டுபிடித்துப் தினமும் வீடுகளுக்குச் சென்று வருகிறது. இந்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் பார்த்த இணையவாசிகள் காளையின் இந்தச் சுவாரசியமான செயலைக் கண்டு வியந்து விதவிதமாகக் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர். சிலர் “இந்தக் காளை மனிதர்களை விட அறிவு கூர்மையுடையதாக இருக்கிறது” என்றும், சிலர் “இனி கதவைத் தட்டும் பொறுப்பைப் பால்காரருக்குப் பதிலாக இந்தக் காளையே எடுத்துக்கொண்டுள்ளது” என்றும் ஜாலியாகக் குறிப்பிட்டு வருகின்றனர்.
