LATEST NEWS
“இங்க பார்க்க வந்ததை மட்டும் பாருங்கடா..!” தாஜ்மஹாலில் வெளிநாட்டுப் பெண்ணை முறைத்த வாலிபர்கள்… ஸ்பாட்லயே வச்சு செஞ்ச புகைப்படக் கலைஞர்..!!
தாஜ்மஹாலுக்கு வரும் வெளிநாட்டுப் சுற்றுலாப் பயணிகளை சிலர் தவறாகப் பார்ப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். அவ்வாறே, தாஜ்மஹாலில் அமர்ந்திருந்த ஒரு வெளிநாட்டுப் பெண் சுற்றுலாப் பயணியை சில இளைஞர்கள் தொடர்ச்சியாக முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தனர். ஆனால், வழக்கம்போல இதை யாரும் கடந்து செல்லாமல், அங்கிருந்த புகைப்படக் கலைஞர் ஒருவர் அந்த இளைஞர்களின் இந்தச் செயலைக் கண்டு கோபமடைந்து உடனடியாகத் தட்டிக்கேட்டுள்ளார்.
‘Official_tajmahal.photography’ என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்ட அந்த வீடியோவில், மூன்று இளைஞர்கள் சற்று தொலைவில் அமர்ந்திருக்கும் வெளிநாட்டுப் பெண்ணையே பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இதைக் கவனித்த புகைப்படக் கலைஞர், கேமராவுடன் அவர்களுக்கு முன் சென்று, “உங்களுக்கு வேறு வேலை எதுவும் இல்லையா? பார்க்க வந்ததை மட்டும் பாருங்கள்” என்று கண்டிக்கிறார். மேலும், “நீங்கள் இப்படி நிற்பதால் அந்தப் பெண் அசௌகரியமாக உணர்வார்” என்று அவர்களிடம் கூறுகிறார். அதற்கு அந்த இளைஞர்கள் “உலகமே தான் பார்க்கிறது” என்று வாதாட, புகைப்படக் கலைஞரோ “உலகம் ஒன்றும் இவர்களைப் போல் மூடர்களைப் போலப் பார்க்கவில்லை” என்று பதிலடி கொடுக்கிறார்.
https://www.instagram.com/reel/DdbZUwtOmPz/?utm_source=ig_web_button_share_sheet
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, இணையவாசிகளிடமிருந்து புகைப்படக் கலைஞருக்குப் பலத்த பாராட்டுகள் குவிந்து வருகின்றன. பலரும் அவரை “ரியல் கிங்” என்று புகழ்ந்து வருவதோடு, இதுபோன்ற தவறான செயல்களில் ஈடுபடுபவர்களுக்குச் சரியான முறையில் பாடம் புகட்டியுள்ளதாகக் கருத்துத் தெரிவித்து வருகின்றனர். மேலும், இந்திய இளைஞர்கள் வெளிநாட்டினரைக் கண்டு இவ்வாறு நடந்துகொள்வது கண்டிக்கத்தக்கது என்றும், புகைப்படக் கலைஞர் மிகவும் திறமையாக இந்தச் சூழலைக் கையாண்டுள்ளார் என்றும் மக்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.
