LATEST NEWS
அரசியலில் திடீர் ட்விஸ்ட்.. விஜய்யின் ரகசிய தூதுவர் பாமக-விடம் பேசிய ‘அந்த’ ரகசிய விஷயம்.. உடைந்தது கோட்டை வட்டார ரகசியம்..!!
தமிழகத்தில் வரவிருக்கும் இடைத்தேர்தல் முடிவுகளுக்குப் பின், பாட்டாளி மக்கள் கட்சி ஆளுங்கட்சியான தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணியில் இணைய வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரங்களில் புதிய தகவல்கள் கசியத் தொடங்கியுள்ளன. கடந்த சட்டமன்றத் தேர்தலில் தவெக 108 இடங்களில் வென்றதைத் தொடர்ந்து, ஆட்சியமைக்க ஆதரவு தேவைப்பட்டபோது திமுக கூட்டணியில் இருந்த விசிக, கம்யூனிஸ்ட்கள் போன்ற கட்சிகளை அணுகிய விஜய், அதிமுக-பாஜக கூட்டணியில் இருந்த பாமகவிடம் ஆதரவு கேட்கவில்லை எனச் சொல்லப்படுகிறது. இருப்பினும், முதல்வராகப் பொறுப்பேற்ற பின் அன்புமணி ராமதாஸை விஜய் மரியாதை நிமித்தமாகச் சந்தித்த நிலையில், தற்போது தவெக-வுக்கு நெருக்கமான பிரமுகர் ஒருவர் மூலமாகப் பாமக தரப்பிடம் ரகசியப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகத் தெரிகிறது.
தற்போது தவெக அரசுக்கு எதிராகப் பேசி வரும் விசிக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளைத் தங்களது கூட்டணியில் இருந்து கழட்டிவிட்டு, வன்னியர் சமூக வாக்குகளைப் பலப்படுத்துவதற்காகப் பாமகவை உள்ளே கொண்டு வர முதலமைச்சர் விஜய் திட்டமிடுவதாகக் கூறப்படுகிறது. பாமகவின் சௌமியா அன்புமணியைத் தவெக அமைச்சரவையில் அமைச்சராக்கும் ஆஃபர் வரை இந்த ரகசியப் பேச்சுவார்த்தையில் முன்வைக்கப்பட்டதாகத் தகவல் கசிந்துள்ளது. தற்போதைய இடைத்தேர்தல் முடிவடைந்தவுடன், தமிழக அரசியல் களத்தில் சில கட்சிகள் தவெக கூட்டணியில் இருந்து விலகவும், பாமக போன்ற புதிய கட்சிகள் இணையவும் அதிக வாய்ப்புள்ளதாக அரசியல் விமர்சகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.
