“எங்கிருந்தோ பெற்றோர் பார்ப்பாங்க…” புற்றுநோயால் தாய், மாரடைப்பால் தந்தை மரணம்.. FIFA உலகக் கோப்பையில் கண்ணீர் விட்டு அழுத வீரர்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“எங்கிருந்தோ பெற்றோர் பார்ப்பாங்க…” புற்றுநோயால் தாய், மாரடைப்பால் தந்தை மரணம்.. FIFA உலகக் கோப்பையில் கண்ணீர் விட்டு அழுத வீரர்..!!

Published

on

FIFA உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான ஆட்டத்தில் கனடா அணி வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பெற்றுள்ளது. இந்த முக்கியப் போட்டியில் கனடா அணிக்கான ஒற்றை வெற்றிக் கோலை நட்சத்திர வீரர் ஸ்டீபன் யூஸ்டாக்கியோ அடித்து அசத்தினார். இந்த அபார வெற்றியின் மூலம் கனடா அணி தனது கால்பந்து வரலாற்றில் முதல் முறையாக உலகக் கோப்பையின் ‘சுற்று 16’ தகுதிச் சுற்றுக்கு முன்னேறி சாதனை படைத்துள்ளது.

போட்டி முடிந்த பின் வெற்றிக் கொண்டாட்டங்களின் போது ஸ்டீபன் யூஸ்டாக்கியோ தனது மறைந்த பெற்றோரை நினைவுகூர்ந்து மைதானத்திலேயே கண்ணீர் விட்டு அழுதார். இவரது தாயார் எஸ்மாரால்டா கடந்த 2023ஆம் ஆண்டு மூளைப் புற்றுநோயால் காலமானார்; அதனைத் தொடர்ந்து அடுத்த ஆண்டே (2024) இவரது தந்தை அர்மாண்டோவும் மாரடைப்பால் எதிர்பாராத விதமாக உயிரிழந்தார். பேட்டியின் போது, “நான் செய்யும் அனைத்தும் என் குடும்பம், பெற்றோர், காதலி, மகள், சகோதரன் மற்றும் நண்பர்களுக்காக மட்டுமே” என அவர் உருக்கமாகத் தெரிவித்தார்.

Advertisement

ஸ்டீபன் யூஸ்டாக்கியோ பெற்றோரை நினைத்து மேடையில் அழுத நெகிழ்ச்சியான காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வைரலாகி வருகின்றன. இதுகுறித்து கனடா அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஜெஸ்ஸி மார்ஷ் பேசுகையில், ஸ்டீபனின் இந்த அசாத்திய வளர்ச்சிக்காக தான் மிகவும் மகிழ்ச்சியடைவதாகவும், அவனது பெற்றோர் எங்கிருந்தோ கண்டிப்பாக இந்த வரலாற்று வெற்றியைக் கண்டு பெருமிதத்துடன் பார்த்துக் கொண்டிருப்பார்கள் எனத் தழுதழுத்த குரலில் பாராட்டியுள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in