அடக்கடவுளே இப்படியா மரணம் வரணும்..? வாழை மரத்தை வெட்டிய தந்தை.. அடுத்த நொடியே பரிதாபமாக துடிதுடித்து உயிரிழந்த சிறுவன்…!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

அடக்கடவுளே இப்படியா மரணம் வரணும்..? வாழை மரத்தை வெட்டிய தந்தை.. அடுத்த நொடியே பரிதாபமாக துடிதுடித்து உயிரிழந்த சிறுவன்…!!

Published

on

கர்நாடக மாநிலம் சிவமொக்கா அருகே உள்ள சாகர் பகுதியில், வாழை மரத்தை வெட்டியபோது எதிர்பாராதவிதமாக குளவி கூடு கலைந்தது. அங்கிருந்த குளவிகள் கூட்டம் 2-ம் வகுப்பு படித்து வந்த 8 வயது சிறுவன் நிச்சித் மற்றும் அவனது தந்தை வெங்கடேஷ் ஆகியோரை ஆக்ரோஷமாக கடித்தன. இதில் படுகாயமடைந்த சிறுவன் நிச்சித் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தான்.

இந்த கோர சம்பவத்தில் சிறுவனின் தந்தை வெங்கடேஷ் உடலெங்கும் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டார். அவர் உடனடியாக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் குறித்து சாகர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து, தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in