LATEST NEWS
FLASH: அதிமுகவில் இணைந்தார் எடப்பாடியின் தவெக வேட்பாளர்… தமிழக அரசியலில் பரபரப்பு..!!
எடப்பாடி சட்டமன்றத் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்த அருண் குமார், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி முன்னிலையில் அதிகாரப்பூர்வமாக அதிமுகவில் இணைந்துள்ளார். முன்னதாக நடைபெற்ற 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலின் போது, அருண் குமார் மற்றும் மாற்று வேட்பாளராக களம் இறக்கப்பட்ட அவரது மனைவியின் வேட்புமனுக்கள் தேர்தல் ஆணையத்தால் நிராகரிக்கப்பட்டன. இதனால் எடப்பாடி தொகுதியில் தவெக நேரடியாகப் போட்டியிட முடியாத சூழல் உருவானது.
வேட்புமனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அந்தத் தொகுதியில் தொலைக்காட்சிப் பெட்டி சின்னத்தில் போட்டியிட்ட ஒரு சுயேச்சை வேட்பாளருக்கு தவெக தனது ஆதரவை வழங்கியிருந்தது. இந்த நிலையில், முன்னாள் அதிமுக நிர்வாகியான அருண் குமார் மீண்டும் தனது தாய் கழகமான அதிமுகவிற்கே திரும்பியிருப்பது சேலம் மாவட்ட அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
