LATEST NEWS
“யாரையும் குறிப்பிட்டு உள்நோக்கத்துடன் பேசவில்லை… தாய், தாய்நாடு, தாய்மொழி மீது எனக்கு மிகுந்த அக்கறை உண்டு”… சர்ச்சைக்கு நயினார் நாகேந்திரன் விளக்கம்..!!
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மற்றும் அவரது தாயார் ஷோபா சந்திரசேகர் ஆகியோரைக் குறிப்பிட்டு பாஜக மூத்த தலைவர் நயினார் நாகேந்திரன் அண்மையில் பேசிய பேச்சு பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. இந்த நிலையில், தன் பேச்சு குறித்து எழுந்துள்ள விமர்சனங்களுக்கு விளக்கம் அளிக்கும் வகையில் அவர் தனது X பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்தப் பதிவில், தான் மேடையில் பேசிய பேச்சை சிலர் தவறாகத் திரித்தும், சித்தரித்தும் அரசியல் ஆதாயம் தேட முயல்வதாக நயினார் நாகேந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், தான் எந்தவித உள்நோக்கத்துடனும் யாரையும் குறிப்பிட்டுப் பேசவில்லை என்றும்; தாய், தாய்நாடு மற்றும் தாய்மொழி ஆகிய மூன்றின் மீதும் தனக்கு எப்போதும் மிகுந்த அக்கறையும் மரியாதையும் உண்டு என்றும் அவர் தெளிவாக விளக்கம் அளித்துள்ளார்.
