FLASH:”நான் பதவி விலகுகிறேன்!”.. டெல்லியில் தீயாய் பரவும் கடிதம்… போர்க்களமாக மாறிய தலைநகரம்.. சற்றுமுன் பரபரப்பு..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

FLASH:”நான் பதவி விலகுகிறேன்!”.. டெல்லியில் தீயாய் பரவும் கடிதம்… போர்க்களமாக மாறிய தலைநகரம்.. சற்றுமுன் பரபரப்பு..!!

Published

on

மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டதாகக் கூறி அவரது பெயரில் தயார் செய்யப்பட்ட போலி கடிதம் ஒன்று சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்திற்கு முழு பொறுப்பேற்று, கடந்த 21-ஆம் தேதியே அவர் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட்டதாக அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. எனினும், இணையத்தில் பரவி வரும் அந்த ராஜினாமா கடிதம் முற்றிலும் போலியானது என்றும், அதில் எந்தவித உண்மையும் இல்லை என்றும் மத்திய அரசு வட்டாரங்கள் மற்றும் அதிகாரப்பூர்வ தரப்புகள் உடனடியாகத் தெளிவுபடுத்தி உறுதி செய்துள்ளன.

ஒருபுறம் இந்த போலி கடிதம் தொடர்பான வதந்திகள் பரவி வந்தாலும், மறுபுறம் நீட் தேர்வு முறைகேடுகளுக்குப் பொறுப்பேற்று அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாகப் பதவி விலக வேண்டும் என்பதை வலியுறுத்தி நாட்டின் தலைநகரான டெல்லியில் போராட்டங்கள் நாளுக்கு நாள் வலுத்து வருகின்றன. பல்வேறு மாணவர் அமைப்பினரும் எதிர்க்கட்சியினரும் தொடர் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருவதால், இந்த விவகாரம் டெல்லி அரசியல் களத்தில் கடுமையான கொந்தளிப்பையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in