LATEST NEWS
“இனி லைனில் நிக்க தேவையில்லை!”.. 20 கி.மீ சுற்றளவில் வசிப்போருக்கு NHAI அளித்துள்ள அதிரடி சலுகை.. வெளியான அசத்தல் அறிவிப்பு..!!
சுங்கச்சாவடிகளை சுற்றியுள்ள 20 கி.மீ தொலைவுக்குள் வாழும் மக்களுக்காக, மாதத்திற்கு ₹350 கட்டணத்தில் FASTag வழங்கும் திட்டம் செயல்பாட்டில் உள்ளது. இதற்கு முன், இந்தப் பயனைப் பெற விரும்புவோர் தங்களது ஆர்.சி புத்தகம் மற்றும் முகவரிச் சான்றை எடுத்துக்கொண்டு டோல்கேட்டுகளுக்கு நேரில் சென்று, நீண்ட வரிசையில் காத்துநின்று சரிபார்க்க வேண்டிய சூழல் இருந்தது. இதனால் பொதுமக்களுக்கு நேரமும் வீணாகி, தேவையற்ற சிரமங்களும் ஏற்பட்டு வந்தன. இந்தச் சிரமத்திற்குத் தீர்வு காணும் வகையில், இனி மக்கள் வீட்டிலிருந்தபடியே ஆன்லைன் மூலமாகவே இந்தச் சலுகையைப் பெற்று ரீசார்ஜ் செய்து கொள்ளும் புதிய வசதியைத் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிமுகப்படுத்தியுள்ளது.
இதன்படி, இனி ‘ராஜ்மார்க் யாத்ரா’ மொபைல் செயலி வாயிலாகவே உள்ளூர் வாகன உரிமையாளர்கள் வீட்டிலிருந்தபடியே மாதாந்திர பாஸ்டேக் கட்டண அட்டையைப் பெற்றுக் கொள்ளலாம். முதற்கட்டமாக டெல்லியில் உள்ள முண்ட்கா – பக்கர்வாலா சுங்கச்சாவடியில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த புதிய நடைமுறையும், ‘மார்க் மித்ரா’ ஆன்லைன் உதவி மையமும் விரைவில் தமிழகத்தில் உள்ள 77 சுங்கச்சாவடிகளிலும் செயல்பாட்டுக்குக் கொண்டு வரப்படவுள்ளது.
