LATEST NEWS
வீட்டில் தனியாக இருந்த பெண்ணை கட்டிப்போட்டு… 21 சவரன் நகைகளை கொள்ளையடித்த தவெக நிர்வாகி கைது… பெரும் பரபரப்பு..!!
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே வீட்டில் தனியாக இருந்த பெண்ணைக் கட்டிப்போட்டு, 21 சவரன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இக்க கொள்ளைச் சம்பவம் தொடர்பாகக் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்த நிலையில், முதற்கட்டமாக இரண்டு பேரைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.
அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கிடைத்த தகவலின் அடிப்படையில், இந்த கொள்ளைச் சம்பவத்தை முன்னின்று திட்டமிட்டுச் செயல்படுத்தியதாகத் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாவட்ட இளைஞரணி இணைச் செயலாளர் சரவண குமாரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் குறித்துப் போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
