3 வயது குழந்தையை முகத்திலே குத்தி குத்தி .. தலைமுடியை பிடித்து இழுத்து கொடூரமாக கொன்ற கள்ளக்காதலன்… விருதுநகரை உலுக்கிய சம்பவம்…!!! – cinefeeds
Connect with us

CRIME

3 வயது குழந்தையை முகத்திலே குத்தி குத்தி .. தலைமுடியை பிடித்து இழுத்து கொடூரமாக கொன்ற கள்ளக்காதலன்… விருதுநகரை உலுக்கிய சம்பவம்…!!!

Published

on

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே 3 வயது பச்சிளம் பெண் குழந்தை விஷ்ணு பிரியா, தாயின் கள்ளக்காதலனால் முகத்திலேயே கொடூரமாகக் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் ஒட்டுமொத்தப் பகுதியையும் உரைய வைத்துள்ளது. இந்த பாதகச் செயலில் ஈடுபட்ட திருத்தங்கல்லைச் சேர்ந்த விக்னேஸ்வரன் என்பவரைச் சிவகாசி கிழக்குக் காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.

கணவர் துரைப்பாண்டியைப் பிரிந்த சுவாதி என்பவர், கடந்த ஒரு மாதமாகத் தனது பெண் குழந்தையுடன் விக்னேஸ்வரனுடன் குடும்பம் நடத்தி வந்துள்ளார். சம்பவத்தன்று போதை தலைக்கேறிய நிலையில் வீட்டிற்கு வந்த விக்னேஸ்வரன், முதல் கணவனின் குழந்தை என்ற ஆத்திரத்தில் சிறுமி விஷ்ணு பிரியாவின் தலையைப் பிடித்து இழுத்து முகத்திலேயே ஓங்கிக் குத்தியுள்ளார். இதில் நிலைகுலைந்த குழந்தை ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது.

Advertisement

தகவலறிந்து விரைந்து வந்த போலிஸார், குழந்தையின் சடலத்தைக் கைப்பற்றி விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தப்பியோட முயன்ற கொலையாளி விக்னேஸ்வரனைப் மடக்கிப் பிடித்த காவல்துறையினர், அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பிஞ்சு குழந்தை என்றும் பாராமல் முகத்திலேயே குத்திக் கொன்ற கள்ளக்காதலனின் கொடூரச் செயல் சிவகாசி மக்களை உலுக்கியுள்ளது. இக்கொடூரச் சம்பவத்திற்குப் பின்னால் வேறு ஏதேனும் உள்நோக்கம் உள்ளதா அல்லது போதை வெறியால் மட்டுமே இந்த அசம்பாவிதம் நடந்ததா என்ற கோணத்தில் போலிஸார் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in