LATEST NEWS
“ஒருவேளை அது என் குழந்தையாக இருந்தால்..?” ஜந்தர் மந்தர் தடியடி குறித்து நடிகை அபிராமி நெஞ்சை உலுக்கும் கேள்வி..!!
டெல்லி ஜந்தர் மந்தரில் நீட் தேர்வு குளறுபடிகளுக்கு எதிராக போராடி வரும் இளைஞர்கள் மீது நடத்தப்பட்ட தடியடிக்கு பிரபல நடிகை அபிராமி தனது கடுமையான கண்டனத்தை பதிவு செய்துள்ளார். பல வருடங்கள் கஷ்டப்பட்டு படித்துவிட்டு ஏமாற்றப்பட்ட இளைஞர்களின் நியாயமான குரலுக்கு, தடியடியே பதிலாக கிடைத்துள்ளது மிகவும் வேதனையளிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். போராட்ட களத்தில் நடக்கும் வன்முறைகளை சுட்டிக்காட்டிய அவர், “ஒருவேளை அங்கு அடிபடுவது என் குழந்தையாக இருந்தால் என்னாவது? என்று யோசிக்காமல் என்னால் இருக்க முடியவில்லை” என தனது தாய்மையின் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
மாணவர்களின் இந்த உரிமைப் போராட்டத்திற்கு பொதுமக்கள் அனைவரும் தங்களது ஆதரவை வழங்க வேண்டும் என்று நடிகை அபிராமி வேண்டுகோள் விடுத்துள்ளார். இளைஞர்கள் மற்றும் மாணவர்களின் எதிர்காலத்தைப் பாதுகாக்கும் இந்த அறப்போராட்டத்தில் அனைவரும் தங்களது உள்ளூர் பகுதிகளில் கலந்து கொள்ள வேண்டும் என்றும், அநீதிக்கு எதிராக அனைவரும் தங்களது குரலை வலுவாக ஒலிக்கச் செய்ய வேண்டும் என்றும் அவர் உருக்கமாக கேட்டுக்கொண்டுள்ளார். சன் நியூஸ் கார்டு மூலம் வெளியாகியுள்ள இவரது இந்த நெகிழ்ச்சியான அறிக்கை தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
