ஐயோ கொடுமையே…! புத்தகம் கொண்டு வரலன்னு இப்படியா செய்வாங்க..? 10 வயது சிறுமியை சுட்டெரிக்கும் வெயிலில் நிற்க வைத்து கொடூர தண்டனை… டெல்லி அரசுப் பள்ளி மாணவி உயிரிழந்ததால் கதறும் தாய்… பள்ளி வாசலில் திரண்டு பொதுமக்கள் அதிரடி போராட்டம்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

ஐயோ கொடுமையே…! புத்தகம் கொண்டு வரலன்னு இப்படியா செய்வாங்க..? 10 வயது சிறுமியை சுட்டெரிக்கும் வெயிலில் நிற்க வைத்து கொடூர தண்டனை… டெல்லி அரசுப் பள்ளி மாணவி உயிரிழந்ததால் கதறும் தாய்… பள்ளி வாசலில் திரண்டு பொதுமக்கள் அதிரடி போராட்டம்..!!

Published

on

கிழக்கு வினோத் நகரில் உள்ள டெல்லி அரசுப் பள்ளியில் புத்தகத்தைக் கொண்டு வரவில்லை என்பதற்காக ஆசிரியரால் தண்டிக்கப்பட்ட 10 வயது சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிறுமிக்கு அளிக்கப்பட்ட தண்டனை மற்றும் அவரது மரணம் தொடர்பான விசாரணை நிலுவையில் உள்ள நிலையில், சம்மந்தப்பட்ட ஆசிரியர் உடனடியாக வேறு இடத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். நியாயமான மற்றும் எவ்வித தலையீடும் இல்லாத விசாரணையை உறுதி செய்யவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கல்வி அமைச்சர் ஆசிஷ் சூட் தெரிவித்துள்ளார்.

காவல்துறை தகவலின்படி, இந்தச் சம்பவம் ஆகஸ்ட் 27 அன்று நடைபெற்றுள்ளது. புத்தகம் கொண்டு வரவில்லை என்பதற்காக ஆசிரியர் சிறுமியை வெயிலில் நிற்குமாறு தண்டித்ததாக அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். சிறுமியின் உடல்நிலை மோசமடைந்ததை அடுத்து, பள்ளி நிர்வாகம் அவரது தாயார் அஞ்சலியைத் தொடர்புகொண்டு வரவழைத்துள்ளது. பள்ளிக்குச் சென்று பார்த்தபோது, தனது மகள் கடுமையான உடல்நலக் குறைவுடன் வெயிலில் நின்று கொண்டிருந்ததாக தாய் கூறியுள்ளார். அதன் பிறகு சிறுமி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில், சிகிச்சையின் போது அவர் உயிரிழந்தார்.

Advertisement

சிறுமியின் மரணத்தைத் தொடர்ந்து, அவரது குடும்பத்தினரும் அப்பகுதி மக்களும் பள்ளிக்கு வெளியே திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டதோடு, இதற்குக் காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர். பாஜக் சட்டமன்ற உறுப்பினர் ரவீந்தர் சிங் நெகி சம்பவ இடத்தைப் பார்வையிட்டு, விசாரணை நடத்தப்பட்டு குற்றவாளி எனக் கண்டறியப்படும் பள்ளி ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார். இந்தச் சம்பவத்தை அரசு மிகவும் தீவிரமாகவும் உணர்வுப்பூர்வமாகவும் அணுகுவதாகவும், விசாரணையில் அலட்சியம் இருப்பது கண்டறியப்பட்டால் சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார். இது குறித்து காவல்துறையினரும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in