“நாங்கள் மனிதர்களை இப்படித்தான் சாப்பிடுவோம்… எங்களை எதிர்த்தால் அவ்வளவுதான்..!” எரியும் சடலத்தின் எலும்பைக் கடித்து எச்சரித்த பெண் தாந்திரீகர்…! இணையத்தில் தீயாகப் பரவும் திகில் வீடியோ..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“நாங்கள் மனிதர்களை இப்படித்தான் சாப்பிடுவோம்… எங்களை எதிர்த்தால் அவ்வளவுதான்..!” எரியும் சடலத்தின் எலும்பைக் கடித்து எச்சரித்த பெண் தாந்திரீகர்…! இணையத்தில் தீயாகப் பரவும் திகில் வீடியோ..!!

Published

on

மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைன் மாவட்டத்தில் உள்ள மயானத்தில், எரிந்துகொண்டிருக்கும் சுடலைக்கு அருகே பெண் ஒருவர் தாந்திரீக பூஜைகளை மேற்கொண்டு, சுடலையிலிருந்த எலும்பு மற்றும் மாம்சத்தை உண்டு அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. காளி நந்த் கிரி என அடையாளம் காணப்பட்ட அந்தப் பெண், உடலெங்கும் சாம்பல் பூசி, கருப்பு ஆடை அணிந்தவாறு உறைக்குள் இருந்து வாளை உருவி, எரியும் சிதைக்குள் எலும்பு, மண்டை ஓடு மற்றும் மாம்சத்தைத் தேடுவது போல வீடியோவில் காட்சி அளிக்கிறார்.

அந்த வீடியோவில், சிதையிலிருந்து மாம்சத்தைச் சேகரித்து உட்கொண்டவாறே பேசும் அந்தப் பெண், “இங்க பாருங்கள், நான் இப்போது மனிதனைச் சாப்பிடப் போகிறேன்… இது மிகவும் சூடாகவும் சுவையாகவும் இருக்கிறது. நான் பெரிய பெரிய தாந்திரீகர்களையே வீழ்த்தியவள், என்னிடம் கவனமாக இருங்கள். உடம்பில் சாம்பல் பூசுவது, மண்டை ஓட்டுடன் விளையாடுவது தான் எங்கள் வேலை. நாங்கள் மனிதர்களை இப்படித்தான் சாப்பிடுவோம், இதுதான் எங்கள் வாழ்க்கை முறை. எங்களால் என்ன செய்ய முடியும் என்பதை உங்களால் நினைத்துக் கூட பார்க்க முடியாது” என்று எச்சரிக்கை விடுக்கும் வகையில் பேசியுள்ளார்.

Advertisement

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானதைத் தொடர்ந்து, அப்பகுதி மக்களிடமும் சாமியார்கள் மற்றும் ஆன்மீக சமூகத்தினரிடமும் பெரும் கொந்தளிப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. மயானத்தில் உள்ள சடலங்களைச் சேதப்படுத்துவதும் அவமதிப்பதும் சட்டப்படி குற்றமாகும் என்பதால், இதுகுறித்து காவல்துறை தீவிர விசாரணை நடத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இருப்பினும், இந்த வீடியோவின் உண்மைத்தன்மை மற்றும் இது எப்போது, எந்த குறிப்பிட்ட பகுதியில் படமாக்கப்பட்டது என்பது குறித்து அதிகாரப்பூர்வ காவல்துறை அறிக்கை இன்னும் எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in