LATEST NEWS
“அய்யோ கடவுளே.. எந்த நொடியிலும் பாலம் உடையலாம்… ஆனா நான் ஓடுவேன்..!” நேபாள வெள்ளத்தில் தன் குடும்பத்திற்காக மரண பயத்தை வென்ற தந்தையின் மாஸ் ஓட்டம்.. நெஞ்சை பதறவைக்கும் வீடியோ..!!!
நேபாளத்தில் ஏற்பட்ட கொடூரப் பெருவெள்ளத்தின் போது, தனது குடும்பத்தைக் காப்பாற்றுவதற்காக குடும்பத் தலைவன் ஒருவன் மரண பயத்தை மீறி ஆபத்தான கம்பிப் பாலத்தில் அசுர வேகத்தில் ஓடி உயிர் தப்பிய நெஞ்சை உலுக்கும் நேரடி வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன. வெள்ள நீர் அசுர வேகத்தில் உயர்ந்து, கம்பிப் பாலத்தைத் தொடும் அளவிற்கு ஆக்ரோஷமாகப் பாய்ந்து கொண்டிருந்த நிலையில், அந்த மனிதனின் குடும்பத்தினர் ஆற்றின் மறுபுறம் தவித்துக்கொண்டிருந்தனர். அந்தப் பாலம் எந்த நொடியிலும் உடைந்து விழலாம் என்ற ஆபத்து இருந்தாலும், தனது குடும்பத்தின் ஒரே வாழ்வாதாரத் தூணாக இருக்கும் அவர், தன் உயிரைப் பற்றிக் கவலைப்படாமல் பாலத்தின் மீது உயிரைப் பணையம் வைத்துச் சீறிப்பாய்ந்து ஓடத் தொடங்கினார்.
https://twitter.com/yati_Official1/status/2094474231270801747/video/1
சுற்றியிருந்த மக்கள் அலறியும், ஆற்றின் அசுர வேகம் அச்சுறுத்தியும் அவர் தனது ஓட்டத்தை நிறுத்தாமல் முழு பலத்துடன் தொடர்ந்து ஓடினார். நீண்ட தூரத்தைக் கடந்த பிறகு அவர் முற்றிலும் சோர்வடைந்த போதிலும், குடும்பத்தின் மீதான பாசம் அவரைப் பாலத்தின் பாதுகாப்பான மறுபுறத்திற்கு வெற்றிகரமாகக் கொண்டு சேர்த்தது. கரைக்கு வந்தவுடன் சோர்வினால் அவரது வேகம் குறைந்தாலும், தனது வாழ்க்கையின் மிகப்பெரிய போரில் வென்று குடும்பத்துடன் பத்திரமாக இணைந்த திருப்தியும் நிம்மதியும் அவரது முகத்தில் அப்பட்டமாகத் தெரிந்தது. இக்கட்டான சூழ்நிலையிலும் தனது குடும்பத்தைக் கைவிடாமல், அவர்களது மகிழ்ச்சிக்காகத் தன் உயிரையே பணையம் வைத்த அந்தத் துணிச்சலான மனிதனின் குடும்பப் பாசத்திற்கு இணையவாசிகள் தற்பொழுது தங்களது வீர வணக்கங்களையும் பாராட்டுகளையும் குவித்து வருகின்றனர்.
