கண்ணீர்..! “என் மகள்கள் படிக்க பீஸ் கட்டணும்” செருப்புக் கூட இல்லாமல் ஓடி வென்ற தாய்.. மகள்களின் படிப்புக்காக 47 வயதில் மாரத்தான் சாதனை.. குவியும் பாராட்டுக்கள்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

கண்ணீர்..! “என் மகள்கள் படிக்க பீஸ் கட்டணும்” செருப்புக் கூட இல்லாமல் ஓடி வென்ற தாய்.. மகள்களின் படிப்புக்காக 47 வயதில் மாரத்தான் சாதனை.. குவியும் பாராட்டுக்கள்..!!

Published

on

மகாராஷ்டிராவின் பீடு மாவட்டத்தைச் சேர்ந்த 47 வயது பெண் ஒருவர், தனது மகள்களின் கல்விச் செலவிற்காக மாரத்தான் போட்டியில் வெறும் கால்களுடன் ஓடி முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். அம்பாஜோகாயைச் சேர்ந்த ரமாபாய் ரன்வீர் என்ற இந்தப் பெண், அப்பகுதியில் உள்ள ஒரு பயிற்சி மையத்தில் மையலராகப் பணியாற்றி வருகிறார்.

மும்பையில் நடந்த விபத்து ஒன்றில் கணவரைப் பறிக்கொடுத்த ரமாபாய், தனது இரண்டு மகள்களையும் தனியாளாக வளர்க்கும் நிலைக்குத் தள்ளப்பட்டார். கடுமையான பொருளாதார நெருக்கடிகள் சூழ்ந்தபோதிலும், தன் மகள்களுக்குச் சிறந்த கல்வியை வழங்க வேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருந்தார்.

Advertisement

இந்நிலையில், போட்டிக்கான பரிசுத் தொகையைக் கொண்டு மகள்களின் படிப்புச் செலவைச் சமாளிக்கலாம் என்ற நம்பிக்கையில் அவர் களமிறங்கினார். எவ்வித காலணிகளும் இன்றி வெறும் கால்களுடன் ஓடி, போட்டியில் வெற்றி பெற்று முதல் பரிசைத் தட்டிப்பறித்து அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in