LATEST NEWS
“என் புள்ள திரும்ப வந்துட்டான்” 6 வயதில் தவறான ரயிலில் ஏறி கேரளா சென்ற சிறுவன்… 13 வருடங்களுக்குப் பின் தாய், சகோதரிகளுடன் இணைப்பு.. கண்ணீர் விட்ட தாய்..!!
6 வயதில் தவறான ரயிலில் ஏறி தன் தந்தையைப் பிரிந்த ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ராஜா கோப், தன் குடும்பத்தை விட்டு வெகுதொலைவில் உள்ள கேரளாவைச் சென்று அடைந்தார். காலப்போக்கில் அவர் புதிய சூழலில் வளர வேண்டியிருந்ததால், தனது தாய்மொழியைக் கூட மறக்கும் சூழ்நிலை ஏற்பட்டது. ஆயினும், அவரது குடும்பத்தினர் அவர் மீண்டும் கிடைப்பார் என்ற நம்பிக்கையை 13 ஆண்டுகள் கைவிடாமல் காத்திருந்தனர்.
ஜார்க்கண்ட் காவல் துறை மற்றும் கேரளா அதிகாரிகளின் தீவிர முயற்சியால், 13 ஆண்டுகளுக்குப் பிறகு ராஜா கண்டுபிடிக்கப்பட்டு வெற்றிகரமாக அவரது சொந்த ஊருக்கு அழைத்து வரப்பட்டார். இத்தனை நீண்ட இடைவெளிக்குப் பிறகு, ராஜா தனது தாயையும் நான்கு சகோதரிகளையும் மீண்டும் சந்தித்து கண்ணீர்மல்கக் கட்டிப்பிடித்து மகிழ்ந்தார்.
சொந்த ஊர் திரும்பிய ராஜாவை, அவரது பழைய பள்ளியின் மாணவர்கள் மேள தாளங்கள், நடனம் மற்றும் உற்சாகமான ஊர்வலத்துடன் கோலாகலமாக வரவேற்றனர். காணாமல் போன ஒரு குழந்தை இத்தனை ஆண்டுகள் கழித்து மீண்டும் தன் வீட்டை வந்தடைந்தது, தொலைந்துபோன நம்பிக்கை எப்போதும் வீண்போகாது என்பதை உலகிற்கு உணர்த்தியுள்ளது.
