LATEST NEWS
இது என்ன கொடுமை… “ஸ்கூலுக்கு இதெல்லாம் கொண்டு வரக்கூடாது..” லஞ்ச் பாக்ஸ்ல வெந்தயக்கீரை வச்சதுக்கு ரூ.50 ஃபைன் போட்ட பள்ளி..! அதிரடி நடவடிக்கை எடுத்த மாநகராட்சி…!!
மும்பை பாயந்தரில் உள்ள ஒரு பள்ளியில், மாணவர் ஒருவர் தனது மதிய உணவுப் பெட்டியில் வெந்தயக்கீரை சப்ஜி கொண்டு வந்ததற்காக ரூ.50 அபராதம் விதிக்கப்பட்ட சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இச்சம்பவம் தபோவன் வித்யாலயா பள்ளியில் நடந்துள்ளது. இது தொடர்பாகப் புகார் எழுந்ததை அடுத்து, பாையந்தர் மாநகராட்சியின் கல்வித் துறை பள்ளி நிர்வாகத்திற்கு விளக்கம் கேட்டு ‘ஷோ-காஸ்’ நோட்டீஸ் அனுப்பியுள்ளதுடன், உரிய விளக்கம் அளிக்காவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது.
மகாராஷ்டிர நவநிர்மாண் சேனா நிர்வாகி ராபர்ட் டி சௌசா, இச்சம்பவம் குறித்து மாநகராட்சியில் புகார் அளித்துள்ளார். தபோவன் வித்யாலயாவில் பெரும்பாலான மாணவர்கள் ஜைன சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், சேர்க்கையின்போதே அசைவ உணவு மற்றும் பூமிக்கு அடியில் விளையும் காய்கறிகளைக் கொண்டுவரக் கூடாது எனப் பெற்றோரிடம் கூறப்படுவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். ஒரு குறிப்பிட்ட உணவைக் கொண்டுவந்ததற்காக மாணவருக்கு அபராதம் விதிப்பது, குழந்தைகள் மீது குறிப்பிட்ட உணவுப் பழக்கத்தைத் திணிப்பதற்குச் சமம் என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
மாநகராட்சி கல்வி அதிகாரி சுலபா வதாரே இது குறித்துக் கூறுகையில், பள்ளிகள் மாணவர்கள் மீது உணவுக் கட்டுப்பாடுகளை விதிக்க முடியாது என்றும், உணவிற்காக அபராதம் விதிப்பது மிகவும் தீவிரமான விஷயம் என்றும் தெரிவித்துள்ளார். இந்த நடவடிக்கை கல்வி உரிமைச் சட்டம் , மாணவர்களின் அடிப்படை உரிமைகள் மற்றும் மாநில அரசின் விதிகளுக்கு எதிரானது என்று நோட்டீசில் குறிப்பிடப்பட்டுள்ளது. முன்னதாக, பாஜக எம்.எல்.ஏ நரேந்திர மேத்தா நடத்தும் செவன் ஸ்கொயர் பள்ளியிலும் பர்யூஷன் திருவிழாவின் போது வெங்காயம், பூண்டு கொண்டு வரக் கூடாது எனச் சுற்றறிக்கை அனுப்பப்பட்டு, பின்னர் எழுந்த எதிர்ப்பால் வாபஸ் பெறப்பட்டது குறிப்பிடத்தக்கது.
