“எங்க ஊருக்கு ரோடு போட்டுத் தாங்க சார்..!” கலெக்டர் ஆபீஸுக்கே போய் கெத்து காட்டிய குட்டிப் பொண்ணு..! மாவட்ட ஆட்சியரிடம் தைரியமாகப் பேசி அதிரடி நடவடிக்கை எடுக்க வைத்த 7 வயது சிறுமி..! இன்டர்நெட்டில் வைரலாகும் வீடியோ..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“எங்க ஊருக்கு ரோடு போட்டுத் தாங்க சார்..!” கலெக்டர் ஆபீஸுக்கே போய் கெத்து காட்டிய குட்டிப் பொண்ணு..! மாவட்ட ஆட்சியரிடம் தைரியமாகப் பேசி அதிரடி நடவடிக்கை எடுக்க வைத்த 7 வயது சிறுமி..! இன்டர்நெட்டில் வைரலாகும் வீடியோ..!!

Published

on

திங்கள்கிழமை அன்று, ‘சம்ரா நாஸ்’ என்ற 7 வயது சிறுமி, தன் குடும்பத்தினருடன் மவ் மாவட்ட ஆட்சியர் ஆனந்த் வர்தன், IAS அவர்களை நேரில் சந்தித்து மனு ஒன்றை அளித்தார். தான் வாழும் பகுதியில் உள்ள மண் சாலை மிக மோசமான நிலையில் இருப்பதாகவும், இதனால் அப்பகுதி மக்களும், தினமும் பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளும் சொல்லொணாத் துயரங்களைச் சந்தித்து வருவதாகவும் அச்சிறுமி தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார். மேலும், “மூச்சு நின்றுபோனவன் மட்டுமல்ல பிணம், தன் உரிமைக்காகக் குரல் கொடுக்காதவனும் பிணம்தான்” என்ற கருத்தை அழுத்தமாகப் பதிவு செய்து, உடனடியாகச் சாலையை அமைத்துத் தருமாறு ஆட்சியரிடம் கோரிக்கை வைத்தார்.

முதலாம் வகுப்பு படிக்கும் சிறுமி சம்ரா அளித்த கோரிக்கை மனுவை ஏற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர் ஆனந்த் வர்தன், அச்சிறுமியின் முயற்சியைப் பாராட்டியதோடு உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். சிறுமி சுட்டிக்காட்டிய மோசமான மண் சாலையின் நிலையை நேரில் சென்று ஆய்வு செய்ய நிர்வாகக் குழுவை அனுப்பவுள்ளதாகவும், ஆய்வு அறிக்கை கிடைத்த பிறகு சட்ட விதிமுறைகளின்படி விரைவாகச் சாலை சீரமைக்கப்படும் என்றும் ஆட்சியர் தெரிவித்தார்.

Advertisement

வெறும் 7 வயதிலேயே தன் பகுதியின் பொதுப் பிரச்சனைக்காக தைரியமாக குரல் கொடுத்து, நிர்வாகத்தின் கதவுகளைத் தட்டிய சிறுமி சம்ராவின் இந்த முயற்சி அப்பகுதியில் பெரும் விவாதப் பொருளாகவும் பேசுபொருளாகவும் மாறியுள்ளது. சமூக வலைதளங்களிலும், அப்பகுதி மக்களிடையேயும் சிறுமியின் இந்த துணிச்சலான பேச்சுக்கும் செயலுக்கும் பலத்த பாராட்டுகள் குவிந்து வருகின்றன. பிரச்சனைகளுக்குத் தீர்வு காண வயது தடையில்லை, சரியான இடத்தில் குரல் கொடுக்கும் தைரியமே முக்கியம் என்பதை அச்சிறுமி நிரூபித்துள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in