“இது உண்மையா? இல்ல டிராமாவா?!”… ஒரே மேடையில் 3 சகோதரிகளுக்குத் தாலி கட்டிய கேமராமேன்.. இணையத்தை உலுக்கும் விசித்திரக் கல்யாணம்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“இது உண்மையா? இல்ல டிராமாவா?!”… ஒரே மேடையில் 3 சகோதரிகளுக்குத் தாலி கட்டிய கேமராமேன்.. இணையத்தை உலுக்கும் விசித்திரக் கல்யாணம்..!!

Published

on

உத்தரப் பிரதேச மாநிலம் அம்ரோஹாவில், சோஷியல் மீடியாவில் ரீல்ஸ் செய்து பிரபலமான ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று சகோதரிகள், தங்கள் வீடியோக்களுக்கு கேமராமேனாக செயல்பட்ட விகாஸ் என்பவரைத் திருமணம் செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 6 மாதங்களாக இவர்களது ரீல்ஸ் வீடியோக்களில் கணவராக நடித்து வந்த விக்கு, 18 முதல் 21 வயதிற்குட்பட்ட சரோஜ், சாவித்ரி மற்றும் சந்தோஷ் ஆகிய மூன்று சகோதரிகளுக்கும் ஒரே கோயிலில் வைத்து தாலி கட்டி திருமணத்தை முடித்துள்ளார். சரோஜ் பி.டெக் படித்து வரும் நிலையில், மற்ற இரு சகோதரிகளும் 12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் என்பதும், இவர்கள் மூவருக்கும் சமூக வலைத்தளங்களில் லட்சக்கணக்கான பின்பற்றுபவர்கள் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

UP- अमरोहा में 3 रीलबाज सगी बहिनों ने अपने कैमरामैन से शादी कर ली है. कैमरामैन विकास उर्फ विक्कू करीब 6 महीनों से तीनों बहिनों के वीडियो कंटेट में उनके पति का रोल निभाता था. विक्कू ने मंदिर में सरोज, सावित्री और संतोष के साथ सात फेरे लिए और उनकी मांग में सिंदूर भरा. सभी दुल्हिनों… pic.twitter.com/DpQsnmfcYU— Narendra Pratap (@hindipatrakar) July 23, 2026

மூன்று சகோதரிகளையும் ஒரே நபர் திருமணம் செய்துகொண்ட இந்த விவகாரம் இணையத்தில் தீயாய் பரவியதை அடுத்து, இத்திருமணத்திற்கு இந்து அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்தத் திருமணம் சமூக விதிமுறைகளுக்கும் கலாச்சாரத்திற்கும் முற்றிலும் எதிரானது என்றும், சமூகத்தில் தவறான முன்மாதிரியை ஏற்படுத்தும் என்றும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். கேமராமேனுடன் ரீல்ஸ் சகோதரிகள் செய்த இந்த அதிரடி திருமணம் தற்போது சோஷியல் மீடியாவில் காரசாரமான விவாதப் பொருளாக மாறியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in