LATEST NEWS
“தினமும் 30-40 பேர் சாகணும்… தாக்குதலைக் குறைக்கக் கூடாது…” நெதன்யாகுவுக்கு எதிராகத் தீவிர கருத்து தெரிவித்த இடமார் பென்-க்விர்..!பாட்காஸ்ட் பேட்டியில் வெடித்த புதிய சர்ச்சை..!!
இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் இடமார் பென்-க்விர், பாட்காஸ்ட் நிகழ்ச்சி ஒன்றில் காசா மீதான போர் குறித்துப் பேசுகையில், அங்கு ஒவ்வொரு இரவும் 30 முதல் 40 பேர் வரை கொல்லப்பட வேண்டும் என்று பரபரப்பான கருத்துகளைத் தெரிவித்துள்ளார். காசா மீதான தாக்குதல்களைப் பிரதமர் நெதன்யாகு குறைத்துக்கொள்வது சரியல்ல என்று சுட்டிக்காட்டிய அவர், இஸ்ரேலின் பாதுகாப்பிற்குத் தீவிரமான நடவடிக்கைகள் தொடர வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளார்.
மேலும் அந்தப் பேட்டியில், இஸ்ரேலுக்கு அச்சுறுத்தலாக இருப்பவர்கள் மட்டுமல்லாமல், வாழ்வதற்குத் தகுதியற்றவர்களும் கொல்லப்பட வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். காசாவில் தொடரும் போர் முறைகள் மற்றும் தாக்குதல்களின் தீவிரத்தைக் குறைக்கக் கூடாது என்ற அவருடைய இந்த வெளிப்படையான கருத்துகள், சர்வதேச அளவில் பெரும் சர்ச்சையையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளன.
