LATEST NEWS
“நாங்க தான் நம்பர் 1… திமுகவின் திட்டங்கள் நடக்குற வரைக்கும் இது திராவிட மாடல் ஆட்சிதான்..!” தவெக 100-வது நாளில் அரசியலைக் சூடேற்றிய ஸ்டாலின்..!!
ஆட்சியில் தமிழக வெற்றிக் கழகம் இருந்தாலும் திமுகவே நம்பர் 1 என அக்கட்சியினர் கூறி வருகின்றனர். முன்னதாக, “அப்பாவை காணோம்” என CM விஜய் பேரவையில் கூறியதை குறிப்பிட்ட ஸ்டாலின், மக்களின் மனதில் இந்த அப்பா இருக்கிறார் என்றார். திமுகவின் திட்டங்கள் தொடரும் வரை திராவிட மாடல் ஆட்சியே நடக்கிறது என பொருள் என்றும் அவர் பேசியிருந்தார்.
தவெகவின் 100 நாள் ஆட்சியை கொண்டாடும் இன்று, ஸ்டாலினின் விமர்சனங்களும் பெரும் கவனம் பெற்றுள்ளது. திமுகவின் இத்தகைய கருத்துகளும், ஸ்டாலினின் தொடர் விமர்சனங்களும் தவெக ஆட்சியின் 100-வது நாள் கொண்டாட்டத் தருணத்தில் அரசியல் களத்தில் விவாதப் பொருளாக மாறியுள்ளன.
