LATEST NEWS
“இனி தயக்கம் காட்டக் கூடாது..!” ஸ்டாலினிடம் உதயநிதி வெளிப்படுத்திய அதிரடி கோபம்.. அறிவாலயத்தில் அரங்கேறிய ஷாக்கிங் பின்னணி!.!!
தேர்தல் தோல்விக்கான பொறுப்பேற்று கட்சி நிர்வாகிகள் மீதும், அமைப்பு ரீதியான மாற்றங்கள் தொடர்பாகவும் மு.க.ஸ்டாலினிடம் உதயநிதி ஸ்டாலின் தனது கடுமையான கோபத்தை வெளிப்படுத்தியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆரம்பத்தில் இதுதொடர்பான நடவடிக்கைகளில் தயக்கம் காட்டப்பட்டாலும், கட்சியை வலுப்படுத்தவும் தேர்தல்களில் எதிர்கொண்ட சவால்களைச் சரிசெய்யவும் உடனடியாக அதிரடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதில் உதயநிதி உறுதியாக இருப்பதாகக் கூறப்படுகிறது.
அவரது இந்த வாதத்தை ஏற்றுக்கொண்ட ஸ்டாலின், சில முக்கிய மாற்றங்களுக்குச் சம்மதம் தெரிவித்துள்ளதாக அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதன் தொடர்ச்சியாக, வரவிருக்கும் திமுக செயற்குழு கூட்டத்திற்குப் பிறகு கட்சியில் பல அதிரடி மாற்றங்களும் புதிய பொறுப்பாளர்களுக்கான நியமனங்களும் இடம்பெறும் என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரத்தில் தற்போது அதிகரித்துள்ளது.
