கூட வந்தவனுக்கு அடித்தது ஜாக்பாட்..! “நீ வேணாம் உன் பிரெண்ட் தான் வேணும்” காதலியைப் பார்க்க நண்பனை கூட்டிட்டு போன காதலன்… மரத்தில் கட்டப்பட்ட பின் காதலி கொடுத்த ஷாக்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

கூட வந்தவனுக்கு அடித்தது ஜாக்பாட்..! “நீ வேணாம் உன் பிரெண்ட் தான் வேணும்” காதலியைப் பார்க்க நண்பனை கூட்டிட்டு போன காதலன்… மரத்தில் கட்டப்பட்ட பின் காதலி கொடுத்த ஷாக்..!!

Published

on

“என் காதலனை வேண்டாம், அவனுடைய நண்பனைத்தான் கல்யாணம் செய்து கொள்வேன்” என்று காதலி ஒற்றைக்காலில் நின்ற ருசிகர சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. ஒரு பெண் வீட்டில் தனியாக இருந்தபோது, அவரைச் சந்திப்பதற்காக அவருடைய காதலன் வந்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக காதலன் தன் நண்பனையும் உடன் அழைத்து வந்துள்ளார். அவர்கள் மூவரும் தனியாக இருப்பதைச் சுற்றியிருந்த கிராம மக்கள் பார்த்துவிட்டனர்.

வீட்டிற்குள் இரு இளைஞர்கள் இருப்பதைப் பார்த்து சந்தேகமடைந்த கிராம மக்கள், அவர்கள் மூன்று பேரையும் பிடித்து அங்கிருந்த ஒரு மரத்தில் கட்டி வைத்தனர். தொடர்ந்து, இதுகுறித்து அந்த இளைஞர்கள் மற்றும் பெண்ணின் குடும்பத்தினருக்கும் தகவல் கொடுத்து வரவழைத்தனர். கிராமப் பஞ்சாயத்து கூடி, அனைவரது முன்னிலையிலும் இந்த விவகாரம் விசாரிக்கப்பட்டது.

Advertisement

அப்போது அங்கு கூடியிருந்த ஒட்டுமொத்த கூட்டத்தையும் அதிரவைக்கும் வகையில் அந்தப் பெண் ஒரு வாக்குமூலத்தைக் கொடுத்தார். “எனக்கு என் காதலனைத் திருமணம் செய்ய விருப்பமில்லை, அவனுடன் வந்த அவனது நண்பனைத்தான் திருமணம் செய்துகொள்வேன்” என்று அந்தப் பெண் தடாலடியாகக் கூறினார். இதைக்கேட்டு காதலன் மற்றும் ஊர் மக்கள் அனைவரும் வாயடைத்துப் போயினர். உதவிக்கு நண்பனை அழைத்து வந்த காதலன், இப்போது அது தன் வாழ்நாளின் மிகப்பெரிய தவறோ என்று தலையில் கைவைத்து புலம்பி வருகிறார்!

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in