LATEST NEWS
“லீவ் கேட்டா வேலையை விட்டு தூக்குவீங்களா?!”.. ஐடி நிறுவனத்தைக் கதறவிட்ட பெண் இன்ஜினியர்.. சோஷியல் மீடியாவில் தீயாய் பரவும் வீடியோ..!!
ஹைதராபாத் மேட்சல் மாவட்டம் குத்புல்லாபூர் பகுதியைச் சேர்ந்த பாவனா என்ற பெண் மென்பொருள் பொறியாளர், டெக் மஹிந்திரா நிறுவன நிர்வாகத்திற்கு எதிராக துண்டிகல் காவல் நிலையத்தில் அதிர்ச்சி அளிக்கும் புகார் ஒன்றை அளித்துள்ளார். தனது மகளின் உடல்நலக்குறைவு காரணமாக மூன்று நாட்கள் மருத்துவ விடுப்பு எடுத்ததற்காக, நிறுவனம் தன்னை எவ்வித முன்னறிவிப்புமின்றி தன்னிச்சையாக வேலையிலிருந்து பணிநீக்கம் செய்துவிட்டதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். முன்அனுமதி மற்றும் முறையான தகவலைத் தெரிவித்த பிறகும், நிர்வாகம் தன்னைத் தொடர்ந்து மன உளைச்சலுக்கு ஆளாக்கியதாகப் பாவனா தனது புகாரில் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
మూడు రోజుల సిక్ లీవ్ తీసుకున్నందుకు ఉద్యోగం తొలగించారు…
టెక్ మహీంద్రాపై మహిళా సాఫ్ట్వేర్ ఇంజినీర్ ఫిర్యాదు
మేడ్చల్ జిల్లా కుత్బుల్లాపూర్లో ఘటన
దుండిగల్ పోలీసులను ఆశ్రయించిన భావన
అకారణంగా విధుల నుంచి తొలగించారని యాజమాన్యంపై ఫిర్యాదు
కుమార్తె అనారోగ్యం కారణంగా మూడు రోజుల… pic.twitter.com/JlXniKsnwm— PulseNewsBreaking (@pulsenewsbreak) July 23, 2026
உடல்நிலை சரியில்லாத நேரத்திலும் உடனடியாகப் பணிக்குத் திரும்புமாறு மின்னஞ்சல் மூலம் தனக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டதாகவும், கழிப்பறைக்குச் செல்வதற்குக்கூட அனுமதி கேட்க வேண்டும் என்று கூறி நிர்வாகம் கடுமையாக மிரட்டியதாகவும் அவர் புலம்பியுள்ளார். மேலும், அந்த மருத்துவ விடுப்பு நாட்களுக்கான ஊதியத்தையும் வழங்காமல், கட்டாயப்படுத்தி அலுவலகத்திற்கு வரவழைத்து அலைக்கழித்ததாக அவர் வேதனை தெரிவித்துள்ளார். கார்ப்பரேட் துறையில் பணியாற்றும் பெண் ஊழியருக்கு நேர்ந்த இந்த அநியாயம் குறித்துப் புகாரைப் பெற்றுக்கொண்ட காவல்துறையினர், டெக் மஹிந்திரா நிர்வாகத்திற்கு எதிராக வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
