CRIME
“எனக்கிட்டேயே வா.. பணம் கேட்டு மிரட்டிய கள்ளக்காதலி..!” சரியான நேரம் பார்த்து பிளான் போட்டு தூக்கிய போலீஸ்காரர்… குலை நடுங்க வைக்கும் பின்னணி..!
தெலுங்கானா மாநிலம் சூர்யாபேட்டை மாவட்டத்தில் நிகழ்ந்துள்ள இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. காவல் நிலையத்தில் குடும்பத் தகராறு தொடர்பாகத் தொடர்ச்சியாகச் சென்று வந்த போது ஏற்பட்ட பழக்கத்தில், போலீஸ்காரர் ஷெரிப் என்பவருக்கும் நாகுலுவின் மனைவி பூபா என்பவருக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. ஷெரிப்பிடம் இருந்து பணத்தைப் பெற்றுக் கொண்டு, தங்களது உறவு குறித்து வருங்கால மனைவியிடம் கூறிவிடுவேன் என்று பூபா மிரட்டியதால் ஏற்பட்ட முன்விரோதத்தின் காரணமாக ஷெரிப் இந்த கொடூரக் திட்டத்தைத் தீட்டியுள்ளார்.
வங்கி கடன் பெற்றுத் தருவதாக ஆசை வார்த்தைகளைக் கூறி, கணவன் நாகுலு மற்றும் பூபாவைத் தனித்தனியே அழைத்துச் சென்றுள்ளார். முதற்கட்டமாக நாகுலுவை மரக்கட்டையால் தாதி கொன்று ஆட்டு எரு குழியில் புதைத்த ஷெரிப், அதன் பிறகு சுந்தர் என்பவரின் உதவியோடு பூபாவையும் வரவழைத்துக் கொலை செய்து மற்றொரு குழியில் புதைத்துள்ளார். இக்கொலைச் சம்பவம் குறித்து ரகசியத் தகவல் கிடைத்ததை அடுத்து, காவல்துறையினர் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.
கண்காணிப்பு கேமரா காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு நடத்தப்பட்ட விசாரணையில் குற்றவாளிகள் பிடிபட்டுள்ளனர். இந்தக் கொடூரக் குற்றத்தில் தொடர்புடைய போலீஸ்காரர் ஷெரிப் மற்றும் சுந்தர் ஆகிய இருவரையும் காவல்துறையினர் உடனடியாகக் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். சட்டத்தைப் பாதுகாக்க வேண்டிய காவற்துறையைச் சேர்ந்தவரே கள்ளக்காதலுக்காகக் கணவன், மனைவி இருவரையும் படுகொலை செய்து புதைத்த இந்தச் சம்பவம் ஒட்டுமொத்த பொதுமக்களையும் உறைய வைத்துள்ளது.
