LATEST NEWS
“ஜெயலலிதாவுக்கு வைத்த அதே பொறி.. தவெகவின் சரிவு இங்கு தான்..” முதல்வர் விஜய்க்கு பத்திரிகையாளர் மணியின் பகீர் எச்சரிக்கை.. பரபரக்கும் அரசியல் களம்..!!!
சட்டமன்றத்தில் தவெகவினர் வெளிப்படுத்தும் கருத்துக்கள் குறித்துப் பத்திரிகையாளர் மணி எழுப்பியுள்ள விமர்சனங்கள் தற்போது அரசியல் அரங்கில் விவாதப் பொருளாகியுள்ளன. குறிப்பாக, தவெகவைச் சேர்ந்த ஆதவ் அர்ஜுனா சமீபத்தில் சட்டசபையில் பேசிய பேச்சு குறித்துப் பேசியுள்ள அவர், விஜயைப் பிரதமராக்கும் நோக்கத்தோடு இதுபோன்ற கருத்துக்களைத் தெரிவிப்பது வெறும் முகஸ்துதிக்காகவே அன்றி வேறில்லை எனச் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் பேசிய அவர், இதுபோன்று கட்சிகளுக்குள்ளேயே தொடங்கும் அதீத துதிப்பாடல்களும் புகழ்ச்சிகளும்தான் எதிர்காலத்தில் ஒரு கட்சியின் சரிவுக்கான பாதையைச் சீக்கிரமே அமைத்துக்கொடுக்கும் என்று எச்சரித்துள்ளார். ஜெயலலிதாவுக்குக் கட்சியினர் செய்த புகழ்ச்சிகளாலும் முகஸ்துதிகளாலும் அதிமுக எப்படி பிற்காலத்தில் கரைந்து காணாமல் போனதோ, அதே போன்ற ஒரு ஆபத்தான சரிவு நிலைதான் தவெகவுக்கும் தொடங்கும் எனவும் அவர் கடுமையாக விமர்சித்துப் பேசியுள்ளார்.
