LATEST NEWS
இவரை கவனிச்சீங்களா..? சுதந்திர தின விழாவுக்காக வந்த முதல்வர் விஜயை வரவேற்ற இந்த பிரபல அதிகாரி யார் தெரியுமா..? வெளியான சுவாரஸ்ய பின்னணி.. ரசிகர்கள் ஷாக்..!!
முன்னாள் திரைப்பட நடிகர் சின்னி ஜெயந்தின் மகனான ஸ்ருதன் ஜெய் நாராயணன் IAS என்ற இளம் அதிகாரி தான், சென்னையில் நடைபெற்ற 80-வது சுதந்திர தின விழாவின் போது முதலமைச்சர் விஜயை வரவேற்று அருகில் நின்றிருந்த அந்தப் பிரபல அதிகாரி ஆவார். நடிகர் சின்னி ஜெயந்தின் மகனான ஸ்ருதன் ஜெய் நாராயணன், கடந்த 2019-ஆம் ஆண்டு நடைபெற்ற மத்திய பொதுச் சேவை ஆணையத்தின் குடிமைப் பணித் தேர்வில் அகில இந்திய அளவில் 75-வது இடத்தைப் பிடித்து ஐஏஎஸ் அதிகாரியாகத் தேர்ச்சி பெற்றார்.
திரையுலகில் மிகப்பிரபலமான நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகராவார். இவர் கடந்த 1996-ஆம் ஆண்டு முதலமைச்சர் விஜய் கதாநாயகனாக நடித்து வெளியான ‘மாண்புமிகு மாணவன்’ திரைப்படத்தில் அவருடன் இணைந்து நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரான சி. ஜோசப் விஜய், தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பின்னர், சென்னை புனித ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் முதல்முறையாகத் தேசியக் கொடியை ஏற்றி வைப்பதற்காகத் தனது வாகனத்தில் இருந்து இறங்கிய போது, இந்த இளம் ஐஏஎஸ் அதிகாரி அவருக்கு வணக்கம் கூறி முறைப்படி வரவேற்றார்.
