LATEST NEWS
இவரோட பையனா இது?….. ஐஏஎஸ் அதிகாரியாக பதவியேற்றார் பிரபல நடிகரின் மகன்….. குவியும் வாழ்த்துக்கள்….!!!!
தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக கலக்கி வந்த நடிகர் சின்னி ஜெயந்த் மகன் ஸ்ருதன்ஜெய் நாராயணன் தற்போது திருப்பூர் மாவட்டத்தில் சார் கலெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனர் மகேந்திரன் இயக்கிய கை கொடுக்கும் கை என்ற திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரையுலகுக்கு அறிமுகமான சின்னி ஜெயந்த் தொடர்ந்து பொங்கலோ பொங்கல், கிழக்கு வாசல், காதலர் தினம் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். திரைப்படங்களில் மட்டுமல்லாமல் இயக்குனர் தயாரிப்பாளர் என்று பன்முகத் தன்மை கொண்ட இவர் சினிமாவில் மிகச்சிறந்த நடிகர்.
இவரின் மகன் ஸ்ருதன்ஜெய் நாராயணன் கடந்த 2019 ஆம் ஆண்டு நடந்த யூபிஎஸ்சி அதாவது ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட பதவிகளுக்கான சிவில் சர்வீஸ் தேர்வில் 75வது இடத்தை பிடித்து தேர்ச்சி பெற்றார். இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு முசோரியில் உள்ள லார்பகதூர் சாஸ்திரி மேலாண்மை பயிற்சி மையத்தில் பயிற்சி, பின்னர் வெளிமாநிலங்களில் களப்பணியில் பயிற்சி பெற்று வந்தார். பயிற்சி காலம் நிறைவடைந்த நிலையில் மத்திய அரசின் திறன் வளர்ப்பு சார் செயலாளராக இருந்த இவர் தூத்துக்குடி பயிற்சி துணை ஆட்சியராக பணியாற்றி வந்தார்.
தற்போது திருப்பூர் மாவட்ட சார் ஆட்சியராக நியமிக்கப்பட்டார். இதை கேள்விப்பட்ட பலரும் அவருக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். சினிமாவில் உள்ள பிரபலங்கள் தங்களது பிள்ளைகளை சினிமாவிலேயே நடிகர்கள், தயாரிப்பாளர், இயக்குனர் என்று அறிமுகப்படுத்தி வரும் நிலையில் சின்னி ஜெயந்த் தனது மகனை ஒரு ஐஏஎஸ் அதிகாரி ஆக்கி இருப்பது அனைவரிடத்திலும் வரவேற்பை கொடுத்துள்ளது.
