CINEMA
பெண் பிள்ளைகளை அப்புறம் வளர்க்கலாம்; முதல்ல உங்க பையனை இப்படி வளர்த்துங்க…”வீட்டில் நான் ஷார்ட்ஸ் போடுவதற்கு இதுதான் காரணம்…நெட்டிசன்களுக்கு நெத்தியடி பதில் கொடுத்த சீரியல் வில்லி பரீனா…!”
தமிழ் சின்னத்திரையில் தொகுப்பாளினியாக அறிமுகமாகி, தற்போது முன்னணி சீரியல் நடிகையாக வலம் வருபவர் பரீனா அசாத். சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ், ராஜ் டிவி எனப் பல முன்னணி தொலைக்காட்சிகளில் ‘கிச்சன் கலாட்டா’, ‘அஞ்சறைப்பெட்டி’ உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கி மக்கள் மத்தியில் பிரபலமானார். சன் டிவியின் ‘அழகு’ சீரியல் மூலம் நடிகையாகக் கால்பதித்த இவர், விஜய் டிவியின் புகழ்பெற்ற ‘பாரதி கண்ணம்மா’ தொடரில் வெண்பா என்ற நெகட்டிவ் கதாபாத்திரத்தில் வில்லியாக நடித்து, ஒட்டுமொத்த தமிழக ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்தார்.
தற்போது திருமண வாழ்க்கையில் ஒரு மகனுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வரும் பரீனா, சமீபத்திய பேட்டி ஒன்றில் இன்றைய சமூகத்திற்குத் தேவையான மிக முக்கியமான parenting (குழந்தை வளர்ப்பு) கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார். அதில், சமூகத்தில் பெண் பிள்ளைகளை எப்படி வளர்க்க வேண்டும் என்று அறிவுரை கூறுவதை விடுத்து, முதலில் ஆண் பிள்ளைகளுக்குப் பெண்களை எப்படி மதிக்க வேண்டும் என்பதைப் பெற்றோர் கற்றுக் கொடுக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார். இந்த ஆரோக்கியமான சிந்தனை தற்போது இணையத்தில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.
இதுகுறித்து அவர் மேலும் பேசுகையில், “நான் வீட்டில் இருக்கும்போது ஷார்ட்ஸ் போன்ற சின்ன சின்ன ஆடைகளை அணிந்திருப்பது வழக்கம். என் மகன் அதைத் தொடர்ந்து பார்த்து வளர்வதால், அவனுக்கு அது மிகவும் சாதாரணமான ஒரு விஷயமாக மாறிவிட்டது. இதனால், அவன் வெளியில் செல்லும்போதோ அல்லது வேறு ஏதேனும் ஒரு பெண் இதுபோன்ற ஆடைகளை அணிந்திருப்பதைப் பார்க்கும்போதோ, அது அவனுக்குக் கவர்ச்சியாகவோ அல்லது தப்பான ஒன்றாகவோ தெரியாது. ஆண் பிள்ளைகள் பெண்களைத் தவறான நோக்கத்தில் பார்க்காமல் இருக்க, சிறுவயதிலிருந்தே இந்த அடிப்படையான புரிதலை நாம் சொல்லிக்கொடுத்து வளர்த்தால், பிற்காலத்தில் அவர்கள் பெண்களை மதிக்கும் சிறந்த மனிதர்களாக வளர்வார்கள்,” என்று பரீனா நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
