அபிஷேக் பச்சனுடன் நடந்தது 2-வது கல்யாணமா?….. ஐஸ்வர்யா ராயின் முதல் திருமணம் குறித்த ரகசியம்….!!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

அபிஷேக் பச்சனுடன் நடந்தது 2-வது கல்யாணமா?….. ஐஸ்வர்யா ராயின் முதல் திருமணம் குறித்த ரகசியம்….!!!!

Published

on

1994 ஆம் ஆண்டு உலக அழகியாக தேர்வு செய்யப்பட்டவர் ஐஸ்வர்யா ராய். இவர் ஹிந்தி, தமிழ், பெங்காலி, ஆங்கில மொழி படங்களில் நடித்துள்ளார். தமிழில் மணிரத்தினத்தின் இருவர் என்ற திரைப்படத்தில் அறிமுகமான இவர் அதன் பிறகு தமிழில் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். அதிலும் இவர் நடித்த ஜீன்ஸ் திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட். இந்தியில் ஒரு கட்டத்தில் முன்னணி நடிகையாகவும், பாலிவுட்டில் பிரைட் ஜட்ஜ் என்ற படத்திலும் நடித்து பிரபலமானார். பாலிவுட்டில் பல நடிகர்களுடன் கிசு கிசுக்கப்பட்ட நிலையில் 2007 ஆம் ஆண்டு அபிஷேக் பச்சனை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பின்பும் நடித்து வந்த ஐஸ்வர்யா ராய் விக்ரமின் ராவணன், சூப்பர் ஸ்டார் உடன் எந்திரன் போன்ற தமிழ் படங்களில் நடித்துள்ளார். இதைத்தொடர்ந்து தற்போது பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நந்தினி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த கதாபாத்திரம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றுள்ளது. இந்நிலையில் ஐஸ்வர்யா ராயின் திருமணம் தொடர்பான சில தகவல்கள் வெளியாகி உள்ளது. அதாவது ஐஸ்வர்யா ராய் நடிகர் அபிஷேக் பச்சனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அது அவர்களின் முதல் திருமணம் கிடையாதாம். இரண்டாவது திருமணம் என்று கூறி வருகின்றனர்.

Advertisement

ஐஸ்வர்யா ராய் அபிஷேக் பச்சனை திருமணம் செய்து கொள்வதற்கு முன்பாக சல்மான் கானை காதலித்து வந்தார். அந்த காதல் தோல்வியில் முடிய இருவரும் பிரிந்து விட்டனர். அதன் பிறகு தான் அபிஷேக் பஜனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமண விஷயம் எடுக்கும்போது ஐஸ்வர்யா ராயின் ஜாதகத்தை பார்த்த குடும்பத்தினர் அவருக்கு மாங்கல்ய தோஷம் இருப்பதாக ஜோசியர் ஒருவர் கூறியுள்ளார்.

இதனால் வாரணாசியில் கும்ப விவாகம் செய்யும் சடங்கை நடத்த சொல்லியுள்ளனர். அப்படி வாரணாசிக்கு சென்று ஐஸ்வர்யா ராய் மரத்தின் அருகில் உட்கார வைத்து தாலி கட்டியுள்ளனர். அதன் பிறகு பரிகார பூஜை முடிந்த பின்பு தான் ஐஸ்வர்யா ராய்க்கும் அபிஷேக் பச்சனுக்கும் திருமணம் நடந்தது என்று பலரும் தெரிவித்து வருகின்றனர். இந்த விஷயம் அவர்களின் திருமணத்தின் போது மிகவும் சர்ச்சையாக பேசப்பட்டது.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in