ரூ.5 லட்சம் இல்ல… இனி ரூ.25 லட்சம் மருத்துவக் காப்பீடு வழங்கும் அரசு..!முதலமைச்சர் வெளியிட்ட மாஸ் அறிவிப்பு..! இன்றே விண்ணப்பிக்க எளிய வழிகள்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

ரூ.5 லட்சம் இல்ல… இனி ரூ.25 லட்சம் மருத்துவக் காப்பீடு வழங்கும் அரசு..!முதலமைச்சர் வெளியிட்ட மாஸ் அறிவிப்பு..! இன்றே விண்ணப்பிக்க எளிய வழிகள்..!!

Published

on

முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்திற்கான காப்பீடு தொகை ரூ.5 லட்சமாக இருந்ததை ரூ.25 லட்சமாக உயர்த்தி முதலமைச்சர் விஜய் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இந்த திட்டத்தின் மூலம் தனியார் மருத்துவமனையில் உயர் ரக சிகிச்சையை பெற்றுக்கொள்ள முடியும். தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் இந்த விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தில் சுமார் 1.40 கோடிக்கும் மேற்பட்ட குடும்பங்கள் இணைந்துள்ளன. இத்திட்டத்தின் கீழ் பிறந்த குழந்தைக்கான சிகிச்சை முறை உட்பட 1,090 சிகிச்சை முறைகளை மக்கள் பெற முடியும்; அதுமட்டுமல்லாமல் குறிப்பிட்ட எட்டு நோய்களுக்கு தொடர் சிகிச்சை பெறவும், 52 மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொள்ளவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இத்திட்டத்தில் இணைய விரும்பும் குடும்பங்களின் ஆண்டு வருமானம் ரூ.1,20,000-க்கு குறைவாக இருக்க வேண்டும். தகுதியுடையவர்கள் கிராம நிர்வாக அலுவலரிடம் வருமானச் சான்று பெற்று, குடும்ப அட்டை மற்றும் ஆதார் அட்டையுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்ட மையத்தில் மனு அளிக்கலாம். மேலும் ஆன்லைனிலும் விண்ணப்பிக்க வசதிகள் உள்ளன. இலங்கைத் தமிழர்கள் முகாம்களில் தங்கியிருப்பதற்கான சான்றுகளை இணைத்து எந்தவொரு வருமானச் சான்றும் இன்றி இத்திட்டத்தில் இணையலாம். ஒரு குடும்பத்தில் உள்ள கணவன், மனைவி, குழந்தைகள் மற்றும் பெற்றோர் அனைவரின் பெயர்களும் குடும்ப அட்டையில் இடம்பெற்றிருந்தால் இச்சிகிச்சைப் பலன்களைப் பெற முடியும்.

Advertisement

விண்ணப்பிக்க கிராம நிர்வாக அலுவலர்/வருவாய் அதிகாரியிடம் பெறப்பட்ட வருமானச் சான்றிதழ், குடும்ப அட்டை , குடும்பத் தலைவரின் சுய உறுதிமொழி கடிதம், அடையாளச் சான்று, முகவரிச் சான்று மற்றும் ஆதார் அட்டை ஆகிய ஆவணங்கள் தேவைப்படும். பயனாளிகள் தமிழ்நாட்டில் வசிப்பவராக இருக்க வேண்டும். குடும்பத்தில் மாற்றுத்திறனாளி ஒருவர் இருந்தால், மாற்றுத்திறனாளிகள் நலத்துறைத் தகவலின்படி வருமான உச்சவரம்பு இன்றி சிறப்புத் தகுதியின் கீழ் சேர்க்கப்படுவர். இத்திட்டத்தின் அட்டை பெற்ற பிறகு, CMCHIS திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெறலாம்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in