“தற்கொலை படையாக மாறுவோம்..!” முதலமைச்சர் விஜய்க்கு ஆர்.பி.உதயகுமார் பகீர் எச்சரிக்கை.. அரசியலில் வெடித்த அதிரடித் தீப்பொறி..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“தற்கொலை படையாக மாறுவோம்..!” முதலமைச்சர் விஜய்க்கு ஆர்.பி.உதயகுமார் பகீர் எச்சரிக்கை.. அரசியலில் வெடித்த அதிரடித் தீப்பொறி..!!

Published

on

அதிமுகவின் வலிமையான நிர்வாகிகளை விஜய்யின் அதிகார துஷ்பிரயோகம் மூலம் அபகரித்து வருவதாக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குற்றம் சாட்டியுள்ளார். சாத்தியமற்ற தேர்தல் அறிக்கையை வெளியிட்டுவிட்டு, பட்ஜெட்டில் எதையும் செயல்படுத்தாமல், தொடர்ந்து கடன் வாங்குவதையே இலக்காகக் கொண்டுள்ளதாக அவர் விமர்சித்துள்ளார். மேலும், சமூக வலைதளங்களில் பெய்ட் ப்ரொபஷனல்களைக் கொண்டு மாய பிம்பத்தை பிரம்மாண்டமாக கட்டமைப்பதாகக் குறிப்பிட்டுள்ள அவர், டிஜிட்டல் டீம் மூலம் அதிமுகவை அழிக்க முயன்றால் விசுவாசத் தொண்டர்கள் தற்கொலை படையாக மாற வேண்டிய சூழ்நிலை ஏற்படும் என்றும் எச்சரித்துள்ளார்.

அந்நியர் படையெடுப்பு போல் அதிமுகவை அபகரிக்க நினைத்தால் குடும்பத்திற்கு ஒருவர் புரட்சியை நிகழ்த்திக் காட்டுவோம் என்றும் அவர் சுதந்திர தின சூளுரையாகத் தெரிவித்துள்ளார். மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதை விட்டுவிட்டு, எதிர்க்கட்சிகளை ஒடுக்க நினைப்பது அதிகார துஷ்பிரயோகத்தின் உச்சம் என்று அவர் தனது வீடியோ பதிவில் கடுமையாகக் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in