“பெரிய பெட்டிக்குள் பதுங்கிய கள்ளக்காதலன்..!” நள்ளிரவில் கையும் களவுமாகச் சிக்கிய ஜோடி.. கொந்தளித்த உறவினர்கள் செய்த காரியம்.. உத்திரபிரதேசத்தில் அரங்கேறிய சம்பவம்..!! – cinefeeds
Connect with us

CRIME

“பெரிய பெட்டிக்குள் பதுங்கிய கள்ளக்காதலன்..!” நள்ளிரவில் கையும் களவுமாகச் சிக்கிய ஜோடி.. கொந்தளித்த உறவினர்கள் செய்த காரியம்.. உத்திரபிரதேசத்தில் அரங்கேறிய சம்பவம்..!!

Published

on

உத்தரப் பிரதேச மாநிலம் ஜாலான் மாவட்டத்தைச் சேர்ந்தவர் கோவிந்த் நிஷாந்த். இவருக்குத் திருமணமாகி மூன்று மகள்கள் உள்ள நிலையில், இவரது மனைவியின் சகோதரரான மறைந்த மச்சானின் மனைவியான சாவித்திரி என்பவருடன் கடந்த 8 ஆண்டுகளாகத் திருமணத்தைத் தாண்டிய உறவில் இருந்து வந்துள்ளார். இந்த விவகாரம் அவர்களது குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் ஏற்கெனவே தெரிந்தே இருந்ததாகக் கூறப்படும் சூழலில், கோவிந்த் அகமதாபாத்தில் இருந்து சுமார் 1,000 கி.மீ. பயணம் செய்து சாவித்திரியின் வீட்டிற்குச் சென்றுள்ளார்.

கடந்த ஆகஸ்ட் 11-ஆம் தேதி நள்ளிரவு சுமார் 11 மணியளவில் சாவித்திரியின் வீட்டிற்குச் சென்ற நிஷாந்த், அவரது அறையில் தனிமையில் இருந்துள்ளார். அப்போது அறைக்குள் இருந்து மெதுவாகப் பேசும் சத்தம் கேட்டுச் சந்தேகமடைந்த வீட்டில் உள்ளவர்கள், உடனடியாக அந்த அறையைச் சோதனையிட்டுள்ளனர். அப்போது அங்கிருந்த பெரிய பெட்டி ஒன்றைத் திறந்து பார்த்தபோது, அதற்குள் கோவிந்த் பதுங்கியிருந்தது கண்டு குடும்பத்தினர் கடும் அதிர்ச்சியடைந்தனர்.

Advertisement

இதனைத் தொடர்ந்து அவர்களை வெளியே அழைத்து வந்து குடும்பத்தினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும், இவர்களின் செயலால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் இருவரையும் ஊருக்குள் ஊர்வலமாக அழைத்துச் சென்ற வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகிப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நள்ளிரவில் கள்ளக்காதலியின் வீட்டுக்குப் பெட்டிக்குள் பதுங்கியிருந்த கோவிந்தின் விவகாரம் குறித்துப் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in