LATEST NEWS
“தசரதரே பண்ணப்ப நாங்க பண்ணக்கூடாதா..? ஒரே கணவனை மணந்த 3 சகோதரிகள்… கொடுத்த ஷாக் விளக்கம்..!!”
உத்தரப்பிரதேச மாநிலம் அம்ரோஹா மாவட்டத்தில் நடந்த ஒரு விசித்திரமான திருமணம் சமூக வலைதளங்களிலும் உள்ளூர் மக்களிடையேயும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அம்ரோஹாவைச் சேர்ந்த மூன்று சகோதரிகள், தங்களுக்குள் இருக்கும் தீவிர அன்பின் காரணமாக எப்போதும் பிரியாமல் வாழ விரும்புவதாகக் கூறி, ஒரே இளைஞரைத் திருமணம் செய்துகொண்டனர். தங்கள் திருமணக் காணொளியை இணையத்தில் பதிவேற்றிய அவர்கள், “ராமாயணத்தில் தசரத மன்னருக்கும் மூன்று மனைவிகள் இருந்தனர், எனவே இதில் என்ன தவறு இருக்கிறது?” என்று கேள்வி எழுப்பித் தங்களின் முடிவை நியாயப்படுத்தினர்.
சமூக வலைதளங்களில் மிகவும் சுறுசுறுப்பாக இயங்கி வரும் இந்த மூன்று சகோதரிகளும், தங்கள் திருமணக் காணொளி மற்றும் விளக்கக் காணொளியை இணையத்தில் பதிவேற்றினர். அதில், தங்களுக்குள் உள்ள பிணைப்பு காரணமாகவே இந்த முடிவை எடுத்ததாகக் குறிப்பிட்டிருந்தனர். இந்தத் திருமணக் காணொளி இணையத்தில் வைரலானதைத் தொடர்ந்து, உள்ளூர் நகராட்சித் தலைவரின் மனைவியுடன் சேர்ந்து இவர்கள் எடுத்த ரீல்ஸ் காணொளிகளும் பெரும் கவனத்தைப் பெற்றன.
இந்தச் சம்பவம் சமூக வலைதளங்களில் ட்ரெண்டான அதே வேளையில், உள்ளூர் அளவில் இதற்குப் பலத்த எதிர்ப்புகளும் கிளம்பியுள்ளன. இந்து தர்ம நம்பிக்கைகள் மற்றும் சனாதன வழக்கங்களுக்கு மாறாக ஒரே நேரத்தில் ஒருவரே மூன்று சகோதரிகளைத் திருமணம் செய்து கொண்டது சட்டப்பூர்வமாகவும் கலாச்சார ரீதியாகவும் தவறானது என்று வணிகர் நல அமைப்புகளும் உள்ளூர்வாசிகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
