LATEST NEWS
5 வருஷமா தண்ணீருக்குள் வாழ்ந்த சிறுவன் வெளியிட்ட ஒற்றை வீடியோ… மாறிய தலைவிதி… அரிதான நோயால் பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு அனந்த் அம்பானி செய்த உதவி..!!
முர்ஷிதாபாத்தைச் சேர்ந்த இக்பால் (16) என்ற சிறுவன், அரிதான தீவிர தோல் நோயால் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வந்த நிலையில், அவனது முழு மருத்துவச் செலவையும் தொழிலதிபர் அனந்த் அம்பானி ஏற்றுக்கொண்டுள்ளார். கடந்த 5 ஆண்டுகளாக இக்பால் நாள் முழுவதும் தண்ணீருக்குள்ளேயே நேரத்தைக் கழித்து வருகிறான். தண்ணீரை விட்டு வெளியே வந்தவுடனேயே அவனது உடலில் தாங்க முடியாத எரிச்சல் ஏற்படுவதால், அவனால் தண்ணீருக்கு வெளியே இருக்க முடிவதில்லை.
தொடர்ந்து பல ஆண்டுகள் தண்ணீருக்குள்ளேயே இருந்ததன் காரணமாக, அவனது உடலின் பிற பகுதிகளின் தோல் கடுமையாகப் பாதிக்கப்பட்டு, கண்களால் பார்க்க முடியாத அளவுக்கு மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில், இக்பாலின் இந்த அவல நிலையைச் சிலர் வீடியோவாகப் பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டனர். அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி அனந்த் அம்பானியின் கவனத்திற்குச் சென்றது.
இதையடுத்து, இக்பாலுக்கு உயர்தர சிகிச்சை அளிப்பதற்காக அனந்த் அம்பானி அவனை மும்பைக்கு வரவழைத்துள்ளார். அங்குள்ள முன்னணி தோல் நோய் நிபுணர்கள் அவனுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கவுள்ளனர். இந்தச் சிறப்பான சிகிச்சையின் மூலம் இக்பால் விரைவில் பூரண குணமடைந்து, மீண்டும் தனது சாதாரண வாழ்க்கைக்குத் திரும்புவான் என எதிர்பார்க்கப்படுகிறது.
