LATEST NEWS
இவனெல்லாம் மனுஷனா..? “பீரியட்ஸ் வந்திருச்சா..?” தேனிலவு போன இடத்தில் மனைவிக்கு மாதவிடாய் ஏற்பட்டதால்… திருமணமாகி 45 நாட்களில் கணவன் செய்த கொடூரம்…!!
தேனிலவு பயணத்தின் போது மனைவிக்கு மாதவிடாய் ஏற்பட்டதால், ஆத்திரமடைந்த கணவன் அவரைக் கை, கால்களால் கடுமையாகத் தாக்கி, கழுத்தை நெரித்துக் கொல்ல முயன்ற அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. அந்தமானுக்குச் சென்ற இடத்தில் நடந்த இந்தத் தாக்குதலின் போது, பெண்ணின் அலறல் சத்தத்தைக் கேட்டு ஓடிவந்த விடுதி ஊழியர்கள் அவரை மீட்டதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
திருமணமாகி வெறும் 45 நாட்களிலேயே இந்தத் தம்பதியின் வாழ்க்கை முடிவுக்கு வந்த நிலையில், பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில் கோரக்பூரில் கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் 3 பேர் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. இயல்பான உடல் மாற்றமான மாதவிடாய் என்பது குற்றமல்ல, ஆனால் அதற்காக மிருகத்தனமாக நடப்பது கண்டிப்பிற்குரிய குற்றமாகும்.
