“ஏன்டா இப்படி பண்றீங்க..?!” இன்ஃப்ளூயன்சரின் கலகலப்பான பிறந்தநாள் பார்ட்டி.. நிமிஷத்தில் மயான பூமியாக்கிய முட்டாள்தனம்… 3 பேர் மரணம்.. இணையத்தில் வைரலாகும் ஷாக்கிங் வீடியோ..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“ஏன்டா இப்படி பண்றீங்க..?!” இன்ஃப்ளூயன்சரின் கலகலப்பான பிறந்தநாள் பார்ட்டி.. நிமிஷத்தில் மயான பூமியாக்கிய முட்டாள்தனம்… 3 பேர் மரணம்.. இணையத்தில் வைரலாகும் ஷாக்கிங் வீடியோ..!!

Published

on

பிரபல இன்ஸ்டாகிராம் இன்ஃப்ளூயன்சர் எகடெரினா டிடென்கோ நடத்திய நீச்சல் குள பார்ட்டியின் போது, யாரும் எதிர்பாராத ஒரு கோர விபத்து ரஷ்யாவில் நிகழ்ந்துள்ளது. குளத்தின் மீது புகை மூட்டத்தைப் போன்ற மாய தோற்றத்தை உருவாக்குவதற்காக, அவர்கள் பல கிலோகிராம் உலர் பனிக்கட்டிகளை நீச்சல் குளத்தில் கொட்டினர். ஆனால், அவர்கள் எதிர்பார்த்த கலகலப்பான சூழல் சில வினாடிகளுக்குள் ஒரு மாபெரும் சோகமாக மாறியது.

في روسيا، وقعت كارثة لم يتوقعها أحد خلال حفلة أقامتها مشهورة إنستغرام إيكاترينا ديدينكو بجانب المسبح.

كانت المشهورة وأصدقاؤها يحاولون صنع تأثير ضبابي فوق المسبح فقاموا بإلقاء عشرات الكيلوغرامات من الثلج الجاف في الماء. لكن اللحظات التي كانوا يتوقعون أن تتحول إلى أجواء ممتعة… pic.twitter.com/kzqgCphjcv— كلوڤر (@ISi3_) August 16, 2026

மூடப்பட்ட அல்லது வரையறுக்கப்பட்ட பகுதியில் உலர் பனிக்கட்டி நீருடன் தொடர்பு கொள்ளும் போது விரைவாகப் பதங்கமாகி, அதிக அளவில் கார்பன் டை ஆக்சைடு வாயுவை வெளிப்படுத்துகிறது. இந்த வாயு பெருமளவில் சேர்ந்து ஆக்சிஜனை வெளியேற்றியதால், குளத்திற்குள் இறங்கிய 3 பேர் மூச்சுத்திணறி மயங்கி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தனர். அவர்களை மீட்கும் முயற்சிகளும் தோல்வியில் முடிந்தன. இந்தத் துயரக் காட்சிகளின் வீடியோ தற்போது இணையத்தில் தீயாய் பரவி, பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை அனைவர் மத்தியிலும் தீவிரமாக எழுப்பி வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in