தம்பி உனக்குத் தெரியுமா.? ஓடிடாதீங்கன்னு சொல்லி விட்டுப் போனவரு.. ஜனநாயக மரபை ஓட, ஓட விரட்டி அடிச்சிட்டாரு… கே.சுப்பராயன் MP விமர்சனம்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

தம்பி உனக்குத் தெரியுமா.? ஓடிடாதீங்கன்னு சொல்லி விட்டுப் போனவரு.. ஜனநாயக மரபை ஓட, ஓட விரட்டி அடிச்சிட்டாரு… கே.சுப்பராயன் MP விமர்சனம்..!!

Published

on

தமிழக சட்டமன்றத்தில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் ஆற்றிய உரை மற்றும் அவரது செயல்பாடுகளை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் கே. சுப்பராயன் தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார். சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலினின் உடல் மொழி மற்றும் அவர் செய்த சைகைகளை விஜய் போலி செய்து காட்டிய விதம் அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து கே. சுப்பராயன் கூறுகையில், “சட்டமன்றத்தில், சட்டமன்ற ஜனநாயகம் பட்ட பாடு, தாளம் படுமா? தறிபடுமா? முதல்வர் பேசிய முறை, அவரது உடல் மொழி, ‘தம்பி உனக்குத் தெரியுமா?’ என்று கேட்ட தோரணை” ஆகியவற்றைக் கடுமையாகச் சாடியுள்ளார். இத்தகைய அநாகரிகமான மற்றும் ஏளனமான செயல்பாடுகளைச் சகித்துக் கொள்ள முடியாமல் ஜனநாயகம் ஓடி ஒளிந்து கொண்டது போலத் தோன்றியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

மேலும், “ஓடிவிடாதீர்கள் என்று சொல்லி விட்டுப் போனவர், ஜனநாயக மரபை ஓட ஓட விரட்டி அடித்து விட்டார்?!” எனக் கூறி, முதல்வரின் இத்தகைய நாடகத் தனமான செயல்பாடுகள் சட்டமன்றத்தின் மாண்பைக் குலைக்கும் வகையில் அமைந்துள்ளதாகத் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in