LATEST NEWS
அவருக்கு பதிலா நான் மண்ணிற்கு கேட்கிறேன்.. அப்படி பேசினது தப்புதான்.. உதயநிதியிடம் மன்னிப்பு கேட்ட முதல்வர் விஜய்…!!
தமிழக சட்டமன்றத்தில் இன்று நடைபெற்ற மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் போது, தவெக அமைச்சர் ரஞ்சித்குமார் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் பெயரைக் குறிப்பிட்டுப் பேசியதால் அவையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அமைச்சரின் இந்தப் பேச்சுக்கு திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் உடனடியாகத் தங்களது பலத்த கண்டனத்தைப் பதிவு செய்ததால் அவையில் பெரும் பரபரப்பு நிலவியது.
இந்த மோதலைத் தொடர்ந்து உடனடியாகத் தலையிட்டுப் பேசிய தவெக முதலமைச்சர் விஜய், அவையை அமைதிப்படுத்தினார். அவர் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட திமுக உறுப்பினர்களைப் பார்த்து, “நமது மறைந்த தலைவர் பெயரை குறிப்பிட்டதற்கு அமைச்சர் சார்பாக நான் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்” என்று நாகரிகத்துடன் கூறி விவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
