“உஷாரா இருங்க மாணவர்களே!”.. போராட்டத்திற்குள் நுழைந்த ‘மூன்றாம் கை’… அண்ணாமலை வெளியிட்ட அதிரடி எச்சரிக்கை.. டெல்லியில் உச்சகட்ட பதற்றம்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“உஷாரா இருங்க மாணவர்களே!”.. போராட்டத்திற்குள் நுழைந்த ‘மூன்றாம் கை’… அண்ணாமலை வெளியிட்ட அதிரடி எச்சரிக்கை.. டெல்லியில் உச்சகட்ட பதற்றம்..!!

Published

on

நீட் வினாத்தாள் கசிவு மற்றும் முறைகேடுகளுக்குப் பொறுப்பேற்று மத்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி, டெல்லி ஜந்தர் மந்தரில் மாணவ அமைப்புகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றன. நாடாளுமன்ற முற்றுகைப் பேரணியின் போது காவல்துறைக்கும் மாணவர்களுக்கும் இடையே தடியடி மற்றும் கண்ணீர் புகைகுண்டு வீச்சு நடந்ததால் அங்குப் பதற்றம் நிலவுவதோடு, பாதுகாப்பு காரணங்களுக்காக 16 மெட்ரோ நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. இந்தச் சூழலில், ‘வீ தி லீடர்ஸ்’ அமைப்பின் நிறுவனர் அண்ணாமலை, மாணவர்களின் இந்தப் போராட்டத்தைச் சில சக்திகள் தங்களுக்குச் சாதகமாகத் திசைதிருப்ப முயல்கின்றனர்.

எனவே போராடும் மாணவர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று குற்றம்சாட்டியுள்ளார். அதனை தொடர்ந்து பாஜக தலைமையிலான மத்திய அரசு மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த ஏன் இவ்வளவு தாமதம் செய்கிறது என்றும், போராட்டம் வன்முறையாக மாறும் வரை காத்திருந்தது யார் என்றும் அவர் கேள்விகளை எழுப்பியுள்ளார். கடந்த 5 ஆண்டுகளில் 3 முறை நீட் வினாத்தாள் கசிந்தும் மத்திய அரசு இதுவரை பொறுப்பேற்காததைச் சுட்டிக்காட்டியுள்ள அவர், மாணவர்களுடன் உடனடியாகப் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களின் கவலைகளுக்கு வெளிப்படையான தீர்வு காண வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளார். நாட்டின் எதிர்காலமான இளைஞர்கள் கல்வி அமைப்பின் நேர்மை மீது நம்பிக்கை இழந்தால் அது நாட்டிற்கே ஆபத்து என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in