LATEST NEWS
“உங்க எம்.எல்.ஏ யார்னு உங்களுக்கே தெரியுமா..?” மேடையிலேயே முதல்வர் விஜயை வெளுத்து வாங்கிய உதயநிதி ஸ்டாலின்.. அனல் பறக்கும் அரசியல் களம்..!!
அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற தி.மு.க. நிகழ்ச்சியில் உதயநிதி ஸ்டாலின், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜயைக் கடுமையாக சாடியுள்ளார். தவெக கட்சியில் இருப்பவர்கள் அனைவருமே ஜோக்கர்கள் என்று குறிப்பிட்ட அவர், அந்த கட்சியில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் யார், அமைச்சர்கள் யார் என்பது முதலமைச்சர் விஜய்க்கே தெரியாது என்று கிண்டல் செய்தார். மேலும், தங்களின் நிர்வாகத்தில் ஊழலற்ற தூய்மையான அரசு மலரும் என்று முழக்கமிட்டவர்கள், தற்போது தி.மு.க. அரசு கொண்டுவந்த பல்வேறு மக்கள் நலத் திட்டங்களின் பெயர்களை மட்டுமே மாற்றி வருவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
தொடர்ந்து பேசிய அவர், புதிய திட்டங்களை உருவாக்குவதை விட்டுவிட்டு, ஏற்கனவே நடைமுறையில் உள்ள திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டுவதைத் தவிர வேறு எந்த ஆக்கபூர்வமான பணியையும் அந்த கட்சியினர் செய்யவில்லை என்றும் விமர்சித்தார். அரசின் சாதனைகளைத் திசைதிருப்பும் நோக்கில் எதிர்க்கட்சிகள் செயல்பட்டு வருவதாகவும், பொதுமக்கள் இவர்களின் முழக்கங்களை அறிந்துகொண்டுள்ளனர் என்றும் அவர் அந்த கூட்டத்தில் சுட்டிக்காட்டினார்.
