அடப்பாவி… கொஞ்சமாவது இரக்கம் இருக்கா..? வழி கேட்பது போல் நாடகம்… சாலையில் மூதாட்டியை தள்ளிவிட்டு தங்கச்சங்கிலி பறித்த ஸ்கூட்டி ஆசாமி..!நெஞ்சை பதற வைக்கும் சிசிடிவி காட்சி..!! – cinefeeds
Connect with us

CRIME

அடப்பாவி… கொஞ்சமாவது இரக்கம் இருக்கா..? வழி கேட்பது போல் நாடகம்… சாலையில் மூதாட்டியை தள்ளிவிட்டு தங்கச்சங்கிலி பறித்த ஸ்கூட்டி ஆசாமி..!நெஞ்சை பதற வைக்கும் சிசிடிவி காட்சி..!!

Published

on

உத்தரகாண்ட் மாநிலம் டெஹ்ராடூனின் வசந்த் விஹார் பேஸ்-2 பகுதியில், ஆகஸ்ட் 14 அன்று மாலையில் 75 வயதான ராஜ்ராணி மிட்டல் என்ற மூதாட்டி நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்தபோது இச்சம்பவம் நடந்துள்ளது. அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளின்படி, பதிவு எண் இல்லாத ‘ஆக்டிவா’ ஸ்கூட்டரில் வந்த நபர் ஒருவர், முதலில் அந்த மூதாட்டியைக் கடந்து சென்றுள்ளார். பின்னர் சற்றே தூரம் சென்று வண்டியைத் திருப்பி வந்து, மூதாட்டியிடம் முகவரி கேட்பது போலப் பேசி வண்டியை நிறுத்தியுள்ளார்.

அந்த மூதாட்டி அவருக்குப் பதிலளித்துக் கொண்டிருந்தவேளையில், திடீரென அந்த நபர் மூதாட்டியின் கழுத்திலிருந்த சுமார் 20 கிராம் எடையுள்ள தங்கச் சங்கிலியைப் பறித்துக் கொண்டு வேகமாகத் தப்பியோட முயன்றுள்ளார். அப்போது மூதாட்டி சங்கிலியைப் பிடித்துத் தடுக்க முயன்றதால், நிலைதடுமாறி சாலையில் பலமாக கீழே விழுந்துள்ளார். விழுந்த அதிர்ச்சியில் அவர் மீண்டும் எழுந்து நிற்க முடியாமல் சாலையில் அவதியுறும் காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளன.

Advertisement

இச்சம்பவம் குறித்து மூதாட்டியின் மகன் வசந்த் விஹார் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர், குற்றவாளியைக் கண்டறிந்து கைது செய்ய 3 தனிப்படைகளை அமைத்துள்ளனர். அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளையும், குற்றவாளி தப்பிச் சென்ற பாதைகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்களையும் கொண்டு, எண் பலகை இல்லாத அந்தச் சக்கர வாகனத்தையும் அதை ஓட்டிச் சென்ற நபரையும் போலீஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in