வேலைன்னு சொன்னா உடம்பு வலிக்கும்… ஆனா ரீல்ஸ்னா எல்லாம் பறக்கும்… சிசிடிவியில் சிக்கிய பணிப்பெண்…! உரிமையாளர் செஞ்ச வேலைதான் அல்டிமேட்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

வேலைன்னு சொன்னா உடம்பு வலிக்கும்… ஆனா ரீல்ஸ்னா எல்லாம் பறக்கும்… சிசிடிவியில் சிக்கிய பணிப்பெண்…! உரிமையாளர் செஞ்ச வேலைதான் அல்டிமேட்..!!

Published

on

வீட்டு வேலைகளுக்கு இடையே இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் செய்வதற்காக நடனமாடிய பணிப்பெண்ணின் காட்சியை, அவரது வீட்டு உரிமையாளர் சிசிடிவி கேமரா மூலம் பார்த்து பதிவு செய்து இணையத்தில் பகிர்ந்துள்ளார். பொதுவாக வீட்டில் பணிப்பெண் வேலைக்கு வரவில்லை என்றால் அந்த நாளே பெரும் சுமையாகத் தோன்றும். ஆனால், அதே பணிப்பெண் வேலைக்கு வந்துவிட்டு வேலையை விட்டுவிட்டு ரீல்ஸ் செய்யத் தொடங்கினால் என்ன செய்வது? இந்தச் சம்பவத்தில், வீட்டு உரிமையாளர் கோபப்படாமல் மிகவும் நிதானமாக பணிப்பெண்ணின் நடனத்தைப் பதிவு செய்ததால், இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

‘theperfect__potatoes’ என்ற கணக்கில் பகிரப்பட்ட இந்த வீடியோவில், முதலில் சிசிடிவி பதிவு தெரியும் டிவி திரை காட்டப்படுகிறது. பின்னர் பணிப்பெண் நடனமாடும் காட்சிக்கு கேமரா திருப்பப்படுகிறது. அப்போது வீட்டு உரிமையாளர், “எங்கள் பணிப்பெண் மேலே வேலை செய்து கொண்டிருக்கிறார் என்றுதான் நாங்கள் நினைத்தோம்” எனக் கூறுகிறார். ஆனால், அங்கு அந்தப் பெண் போனை முன்னே வைத்து ரீல்ஸுக்காக நடனமாடிக் கொண்டிருக்கிறார். இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், அந்தப் பணிப்பெண்ணுக்கு இன்ஸ்டாகிராம் கணக்கை உருவாக்கித் தந்ததே அவரது வீட்டு உரிமையாளர்தான். மேலும், “இவர்களிடம் இன்னும் ஒரு கூடுதல் வேலை செய்யச் சொன்னால் உடனே உடம்பெல்லாம் வலிப்பதாகச் சொல்வார்கள், ஆனால் நடனம் மட்டும் அருமையாக ஆடுகிறார்” என்று உரிமையாளர் ஜாலியாகக் கூறுகிறார்.

Advertisement

https://www.instagram.com/reel/Db2iDqJPYF3/?utm_source=ig_web_button_share_sheet

இந்த வீடியோவைப் பார்த்த இணையவாசிகள் பணிப்பெண்ணின் மகிழ்ச்சியைக் கண்டு நெகிழ்ந்து கருத்து தெரிவித்து வருகின்றனர். “அவருக்கும் மகிழ்ச்சியாக இருக்க முழு உரிமை உண்டு, அவரை சந்தோஷமாக இருக்க விடுங்கள்” என்று பலரும் கூறியுள்ளனர். ஒரு பயனர் இதை “அற்புதமான நடனம்” என்று பாராட்டியுள்ளார். மற்றொரு பயனர் வீட்டு உரிமையாளரிடம், “உங்களுக்கும் பதிவிடுவதற்கு நல்ல வீடியோ கண்டென்ட் கிடைத்துவிட்டது” என்று நகைச்சுவையாகப் பதிவிட்டுள்ளார்.

Advertisement

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in