“எம்.எல்.ஏ பதவியை ரத்து செய்யுங்க..!” அரைகுறை ஆடையுடன் பெண்களிடம் மனு வாங்கிய ஆம் ஆத்மி பிரமுகர்… அதிரடி காட்டிய டெல்லி முதல்வர்..!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“எம்.எல்.ஏ பதவியை ரத்து செய்யுங்க..!” அரைகுறை ஆடையுடன் பெண்களிடம் மனு வாங்கிய ஆம் ஆத்மி பிரமுகர்… அதிரடி காட்டிய டெல்லி முதல்வர்..!!!

Published

on

டெல்லி அரசின் ‘லட்சுமி யோஜனா’ நிதியுதவித் திட்ட விண்ணப்பங்களைப் பரிசீலிக்க மக்கள் வந்திருந்தபோது, ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏ அனில் ஜா ஆடை நெறிமுறைகளைப் பின்பற்றாமல் பனியன் மற்றும் டிராயருடன் அமர்ந்து மனுக்களில் கையெழுத்திட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மக்கள், குறிப்பாகப் பெண்கள் திரண்டிருந்த இடத்தில் மக்கள் பிரதிநிதி ஒருவர் இத்தகைய அநாகரிகமான முறையில் நடந்துகொண்டது குறித்து டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தா சட்டப்பேரவையில் தனது கடும் கண்டனத்தைத் பதிவு செய்தார். இந்தச் சம்பவம் டெல்லி அரசியலிலும் சமூக வலைதளங்களிலும் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.

எம்.எல்.ஏ அனில் ஜாவின் இந்த அலட்சியப் போக்கிற்குச் சட்டமன்றத்தில் கடும் எதிர்ப்பு தெரிவித்த முதலமைச்சர் ரேகா குப்தா, பொதுமக்களும் பெண்களும் சந்திக்க வரும் வேளையில் ஒரு மக்கள் பிரதிநிதி கண்ணியமான ஆடையில் இருப்பதே முறையானது என்றும், இந்த அநாகரிகச் செயலுக்காக அவரது சட்டமன்ற உறுப்பினர் பதவியையே உடனடியாகப் பறிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். அத்துடன் பேரவை நடவடிக்கைகளின் போதும் அவர் தவறான நடத்தையை வெளிப்படுத்தியதாகக் குற்றம்சாட்டினார். ஆனால் இக்கருத்துகளை முற்றிலும் நிராகரித்த அனில் ஜா, மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணத் துப்பில்லாத அரசு, தன் மீது வீண் பழிகளைச் சுமத்தித் திசைதிருப்ப முயல்வதாகப் பதிலடி கொடுத்துள்ளார்.

Advertisement

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in