LATEST NEWS
“தயவுசெஞ்சு உங்க லைவ் லொகேஷனை ஷேர் பண்ணுங்க..! தனிமையான இடத்திற்கு அழைத்துச் சென்ற ரேபிடோ ஓட்டுநர்… அலறியும் நிறுத்தாததால் ஓடும் பைக்கிலிருந்து குதித்து… உயிர் தப்பிய பெண்னின் வைரல் வீடியோ…!!”
டெல்லியைச் சேர்ந்த ஆயிஷா ஸ்ரீவஸ்தவா என்ற பெண், தனது வீட்டிலிருந்து அலுவலகத்திற்குச் செல்வதற்காக ரேபிடோ பைக் ரைடு பதிவு செய்தார். பயணத்தின் போது, ரேபிடோ ஓட்டுநர் வரைபடத்தில் உள்ள சரியான பாதையில் செல்லாமல், ஒரு தனிமையான மற்றும் ஆள்நடமாட்டமில்லாத பாதையை நோக்கி பைக்கை ஓட்டிச் சென்றுள்ளார். அந்த வழிதான் நேரான பாதை என ஓட்டுநர் கூறியபோதிலும், அருகில் இருந்த மக்கள் அது சரியான பாதை அல்ல என்று ஆயிஷாவிடம் தெரிவித்தனர்.
நிலைமையை உணர்ந்த ஆயிஷா, பைக்கை உடனே திருப்புமாறு ஓட்டுநரிடம் கூறியுள்ளார். ஆனால், கதறி அழுது அலறியும் ஓட்டுநர் பைக்கை நிறுத்த மறுத்துள்ளார். ஆபத்தை உணர்ந்த ஆயிஷா, ஓட்டுநரைத் தாக்கி பைக்கை நிறுத்த முயன்றார். அப்போதும் அவன் வண்டியை நிறுத்தாததால், வேறு வழியின்றி ஓடும் பைக்கில் இருந்தே கீழே குதித்தார். இதில் அவருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டன. இச்சம்பவம் குறித்து அவர் வீடியோ பதிவு செய்து, அனைவரும் தங்களது நேரலை இருப்பிடத்தை குடும்பத்தினருடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளார்.
https://www.instagram.com/reel/Db40YtiJydm/?utm_source=ig_web_button_share_sheet
ஆயிஷாவின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, ரேபிடோ நிறுவனம் உடனடியாகப் பதிலளித்தது. முதலில் அவரிடம் விவரங்களைக் கேட்டறிந்த நிறுவனம், சம்பந்தப்பட்ட ரேபிடோ கேப்டனை பணியிலிருந்து நீக்கியதாக அறிவித்தது. மேலும், ஆயிஷா காவல் நிலையத்தில் புகார் அளிப்பதற்கு வசதியாக, அந்த ஓட்டுநரின் முழு விவரங்களையும் மின்னஞ்சல் மூலம் அனுப்பி நடவடிக்கை எடுத்துள்ளது.
