LATEST NEWS
நெஞ்சை நடுங்க வைக்கும் பயங்கரம்..! வேலை முடிந்து வீடு திரும்பிய இளைஞருக்கு காத்திருந்த எமன்… கண்ணிமைக்கும் நேரத்தில் உயிரைப் பறித்த மாயப் பள்ளம்… உள்ளாட்சி அமைப்புகளின் அலட்சியத்தால் பறிபோன 28 வயது இளைஞனின் கனவுகள்..!!
டெல்லியின் சுராஜ்மல் விஹார் பகுதியில் வீதியை கடக்க முயன்ற 28 வயதுடைய இளைஞர் ஒருவர், சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தில் விழுந்து மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வியாழக்கிழமை காலை, மருத்துவ பராமரிப்பாளராக பணிபுரியும் சந்தீப் என்ற அந்த இளைஞர், ஒரு முதியவரைக் கவனித்துக் கொள்ளும் வேலையை முடித்துவிட்டு தனது வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது இந்தச் சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது.
முதற்கட்ட விசாரணையின்படி, சந்தீப் சாலை எண் 58-ஐ கடக்க முயன்றபோது, அங்கிருந்த தடுப்புச்சுவர் அருகே இருந்த மின் கம்பத்தின் அடியில் நிலச்சரிவு ஏற்பட்டு மண் உள்வாங்கியுள்ளது. இதனால் சுமார் இரண்டு முதல் மூன்று அடி ஆழமுள்ள பள்ளம் உருவானதில், சந்தீப் இடுப்பளவு வரை அந்தப் பள்ளத்தில் சிக்கிக்கொண்டார். அப்போது மின் கம்பத்தின் அடிப்பகுதியில் பாய்ந்து கொண்டிருந்த மின்சாரக் கம்பியின் மீது அவர் உரச நேரிட்டதால், சம்பவ இடத்திலேயே மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.
இச்சம்பவம் குறித்து காலை 7:30 மணியளவில் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், சந்தீப்பை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்; ஆனால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இச்சம்பவத்தில் உள்ளாட்சி அமைப்புகளின் அலட்சியப்போக்கே முதன்மை காரணம் எனக் சுட்டிக்காட்டியுள்ள போலீசார், பிரேத பரிசோதனை அறிக்கைகாக காத்திருப்பதுடன், அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளையும் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர்.
