அடப்பாவமே… மாமியார் வீட்டுக்கு போகும்போது இவ்வளவு கோபமா..? “ஒரு பாக்ஸ் ஸ்வீட் தான் வாங்குவியா..?” மனைவியின் கேள்வியால் ஆத்திரமடைந்து அபாச்சி பைக்கை தீயிட்டுக் கொளுத்தியக் கணவன்..! நெட்டிசன்களை உரையவைத்த வீடியோ..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

அடப்பாவமே… மாமியார் வீட்டுக்கு போகும்போது இவ்வளவு கோபமா..? “ஒரு பாக்ஸ் ஸ்வீட் தான் வாங்குவியா..?” மனைவியின் கேள்வியால் ஆத்திரமடைந்து அபாச்சி பைக்கை தீயிட்டுக் கொளுத்தியக் கணவன்..! நெட்டிசன்களை உரையவைத்த வீடியோ..!!

Published

on

உத்தரப் பிரதேச மாநிலம் பிஜ்னோர் மாவட்டத்தில், கணவன் மற்றும் மனைவிக்கு இடையே ஏற்பட்ட சிறிய தகராறு காரணமாகக் கணவன் தனது அபாச்சி பைக்கை தீயிட்டுக் கொளுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜட்புராவைச் சேர்ந்த பப்ளு சைனி என்பவர் ரக்ஷா பந்தன் பண்டிகையை முன்னிட்டு தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் கோட் சராயில் உள்ள மாமியார் வீட்டிற்கு பைக்கில் சென்று கொண்டிருந்தார். வழியில் தஹீர்பூர் கிராமம் அருகே நடந்த இந்த விசித்திரச் சம்பவத்தின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மாமியார் வீட்டிற்குச் செல்லும் வழியில், பப்ளு சைனியிடம் அவரது மனைவி இரண்டு பெட்டி இனிப்புகளையும் பெரிய கூல் டிரிங்க்ஸ் பாட்டிலையும் வாங்குமாறு கேட்டுள்ளார். ஆனால் பப்ளு இரண்டு பெட்டிகளுக்குப் பதிலாக ஒரே ஒரு பெட்டி இனிப்பை மட்டும் வாங்கியுள்ளார். இதனால் அதிருப்தியடைந்த மனைவி, வழியிலேயே அவரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். இருவருக்கும் இடையேயான வாக்குவாதம் முற்றியதால் கடுமையான ஆத்திரமடைந்த பப்ளு, தஹீர்பூர் பஞ்சாயத்து அலுவலகம் அருகே சாலையோரமாகத் தனது பைக்கை நிறுத்தி, அதிலேயே தீ வைத்துள்ளார்.

Advertisement

https://dainik.bhaskar.com/CTbplpcpY5b

பப்ளு பைக்கை தீயிட்டுக் கொளுத்தியதைக் கண்டு அதிர்ச்சியடைந்த மனைவியும் குழந்தைகளும் செய்வதறியாது பயந்து நடுங்கினர். பைக் கண்முன்னே கொழுந்துவிட்டு எரிந்து முழுமையாகச் சாம்பலானதை அடுத்து, பப்ளு பைக்கை அங்கேயே விட்டுவிட்டு நடந்தேச் செல்லத் தொடங்கினார். அவரைத் தொடர்ந்து மனைவியும் குழந்தைகளும் நடந்தேச் சென்றனர். இதைப் பார்த்த அவ்வழியாகச் சென்றவர்கள் தங்களின் செல்போனில் வீடியோ எடுத்து இணையத்தில் பதிவேற்றினர். இச்சம்பவம் குறித்து காவல்துறை தரப்பில் இதுவரை அதிகாரப்பூர்வ வழக்குப்பதிவோ அல்லது அறிக்கையோ வெளியிடப்படவில்லை.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in